FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

ஃபேஸ்புக் எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை




கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.

அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.

" நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட-நேரிடலாம்.


"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.

எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.


எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.


மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும்-நம்மை-காப்பாற்றும்.

மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம்-தெரிவிக்காதீர்கள்.

இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.

மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட-போய்விட-வாய்ப்புள்ளது.

மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள்,லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும்-சந்திக்க-வேண்டியதிருக்கும்.

அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது-குழந்தைகளை-கடத்தவும்-வாய்ப்புண்டு.

எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!


gravatar

FACEBOOK உங்களை விடுவதாக இல்லை.


பேஸ்புக்கில் இருந்து விடுபடுவது சுலபமானதல்ல

சனி, 18 ஜூன் 2011 13:11

பேஸ்புக் சமூக இணையத்தளம் வாயிலாக தங்களது தனிப்பட்டத் தரவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதி பெரும் எண்ணிக்கையானவர்கள் அண்மைக் காலத்தில் அந்த இணையத் தளத்திலிருந்து விலகிக் கொண்டனர்.

பிரிட்டனில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேஸ்புக் பாவனையாணர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பேஸ்புக்கை நீங்கள் விட்டாலும் அது உங்களை விடப்போவதில்லை என்பதுதான் புதிய தகவல்.

பேஸ்புக்கில் இருந்து விலகிக் கொள்வதை “பேஸ்புக் தற்கொலை” என்று வர்ணிக்கின்றார்கள். இந்தத் தற்கொலையை செய்து கொள்வது நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானதல்ல. இதற்கு இரண்டு வழிகள் உண்டு.ஒன்று உங்கள் பேஸ் புக் பக்கத்தை செயல் இழக்க வைப்பது.

மற்றது அதை முற்றாக அழித்து விடுவது. நீங்கள் இதை செயல் இழக்க வைத்தால் அது உங்களுக்கு உங்களின் பேஸ்புக் நண்பர்களின் படங்களையும்,செய்திகளையும் மீண்டும் மீண்டும் ஈ மெயில் வழியாக அனுப்பி அவர்கள் உங்களைத் தேடுகின்றனர்.

உங்களோடு தொடர்பு கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் கலந்து கொள்ளாமல் தவற விடும் வைபவங்கள் பற்றியும் அதில் பங்கேற்கும் உங்கள் நண்பர்கள் பற்றியும் அது உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

இதன் மூலம் இந்தக் கொடிய பேஸ்புக்கின் பிடியிலிருந்து நீங்கள் மீளவும் முடியாமல்,ஒரு நிலையான முடிவுக்கும் வர முடியாமல் அது உங்களை நிலை குலையச் செய்யும்.

மேலும் நீங்கள் உங்கள் பக்கத்தை முழுமையாக அழித்து அதை கைவிட்டாலும் உங்கள் நண்பர்கள் அதில் தங்களுக்கு விருப்பமானவற்றை தொடர்ந்து தரவேற்றம் செய்ய முடியும். எனவே பேஸ்புக் கொடுமையிலிருந்து நீங்கள் விடுபட நினைத்தாலும் இப்போதைக்கு அது உங்களை விடுவதாக இல்லை.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=23304%3A2011-06-18-07-47-37&catid=121%3A2010-02-24-14-26-50&Itemid=657