FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே


இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. 


இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். 


பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும். பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும். 

தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது. 

காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே. 


எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே. அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே 

gravatar

பேஸ்புக்கின் மற்றுமொரு அசிங்கம் - இந்தியா அதிர்ந்து போனது

இந்தியா பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன.

இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர். ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர். 

பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

gravatar

பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவனால் வந்த விபரீதம்

கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகேஷ் குமார் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் ஸாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...
எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன். அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளை பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையை சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

இந்தக் கடிதத்தை 11ம் தேதி அவர் எழுதியுள்ளார். ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு அவர்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்

http://thatstamil.oneindia.in/news/2011/10/13/i-killed-my-wife-shameela-having-relationships-many-aid0091.html

gravatar

உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்...

NAGORE FLASH shared a post with you on Google+. The Google+ project makes sharing on the web more like sharing in real-life. Learn more.
Join Google+
உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்–பழியை ஏற்க முஸ்லீம்கள் இருக்கிறார்கள்

http://nagoreflash.blogspot.com/2011/09/blog-post_15.html
!!!~~~NAGORE FLASH~~~!!!: உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்–பழியை ஏற்க முஸ்லீம்கள் இருக்கிறார்கள்
!!!~~~NAGORE FLASH~~ ........அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்........ >>>>>>>>>>>>>> இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்க...
View or comment on NAGORE FLASH's post »
You have received this message because NAGORE FLASH shared it with nagore51.facebook@blogger.com. Unsubscribe from these emails.

gravatar

ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!

சில புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான  ஃபேஸ்புக்', 'டிவிட்டர் போன்றவற்றை எண்டெர்டெய்ன்மெண்டுக்காகபயன்படுத்துபவர்கள் அவசியம் படியுங்கள்
*************************************************************

ஆர்குட்', 'ஃபேஸ்புக்', 'டிவிட்டர்'... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!

''நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...' என்றுசொல்பவர்களைடெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன்பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும்பெண்களையும் தங்கள்பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்...அதில் தன் புகைப்படம்-மெயில் .டிதொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம்அதைப் பார்த்துஅந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளிகல்லூரிஅலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும்இருக்கலாம்புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல்அனுப்புவார்கள்ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.

ஏற்றுக்கொண்டால்... புகைப்பட பரிமாற்றங்கள்கருத்துப் பரிமாற்றங்கள்வாழ்த்துப் பரிமாற்றங்கள் என்று அந்த நட்புகலகலதான்இத்தகைய நட்பு... ஓர் எல்லையோடு இருந்தால் பிரச்னை இல்லைஎல்லை தாண்டும்போது... லகலகதான்!குறிப்பாகபெண்கள் பலரும் அந்த இணைய உலகின் முட்கரங்களில் சிக்கிக் கொண்டு சீரழியும் செய்திகள் பகீரிடச்செய்கின்றன.

அமெரிக்காவில் ஒரு பெண், 'குடும்பத்துடன் டூர் போறேன் கைஸ்ஒரு வாரம் ட்விட்டர் ஃப்ரெண்ட்ஸுக்கு பை!' என்று'ட்விட்செய்துவிட்டுச் சென்றார்டூர் முடிந்து வீடு திரும்பியவருக்கு... அதிர்ச்சிதுடைத்து வைத்தாற்போல வீடுதிருடப்பட்டிருந்ததுகொள்ளையனை வலைவீசி காவல்துறை பிடித்தபோது, ''ட்விட்டர்ல நான் அவங்க ஃப்ரெண்ட்ஒருவாரம் வீட்டுல இருக்க மாட்டேன்னு 'ட்வீட்செஞ்சிருந்ததைப் படிச்சுட்டுபிளான் பண்ணினேன்'' என்றான் கூலாக!

''முன்பின் தெரியாதவர்களை நண்பர்களாக ஏற்கும்போது... இப்படித்தான் மோசடிக்காரர்கள்திருடர்கள்,கொலைகாரர்களும் நமக்கு 'நெட் ஃப்ரெண்ட்ஸ்ஆகிவிடுகிறார்கள்அப்படிப்பட்டவர்கள் சமூக வலைதளத்தின் மூலமாக, 'ஃப்ரெண்ட்ஷிப்வேண்டும்என்று கேட்கும்போதே 'குட்பைசொல்லிவிட்டால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்''என்பதுதான் இதற்கான அட்வைஸாக இருக்கும்ஆனால்இப்படி 'ரிஜக்ட்செய்தும்கூட அந்த டீன் ஏஜ் கேர்ளுக்கு நேர்ந்ததுன்பம்பரிதாபம்எங்களிடம் வந்த அந்த கேஸ் பற்றி பார்ப்போம்.

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர்மாற்றப்பட்டுள்ளதுஇருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன்மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடிவந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்கஅவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...''என்றாள் ரக்ஷனாகோபமான அப்பஅவனைக் கடுமையாகக் கண்டித்தார்உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்கபொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான்ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க''என்று சீறினான்.

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான்ஆனாநீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்லஉங்கள நான்வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்கஅவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.

பிரச்னை முடியவில்லைவாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்கஆத்திரமும்ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பாரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்' இல்லஅவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல.கூடவேமுதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய்எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன்.இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும்அழுகையுமாக.

அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க', ''சார்... வேணும்னாபாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான்அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்...ரக்ஷனாமேலும்அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள்தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல்சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வாகாபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்என்றமெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன்ஆதாரத்துடன்.

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்லஎன் போட்டோ-மெயில் .டிகொடுத்து வேற யாரோ என்பெயர்ல கிரியேட் பண்ணிஇப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனாஒரே வாரத்தில்அப்படிகேடித்தனம் செய்த கேரள இளைஞனைஅவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.

அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?

''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்னதெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல'னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தாஒரு கட்டத்துல ஆத்திரமாகி,அவளை பழிவாங்க நினைச்சேன்அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தாசென்னையில இருக்கறஎன் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன்ஏற்கெனவே தன்னோடபுரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்துஅவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட்பண்ணினேன்அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்பண்ணிஅவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்றுகக்கினான் அந்த இளைஞன்அவனைக் கண்டித்துஅந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.

'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்'னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்டதப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா!

ஆம்... புகைப்படம்மெயில் .டிமொபைல் நம்பர்பள்ளிகல்லூரிஅலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூகவலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

நன்றிஅவள் விகடன்

gravatar

ஃபேஸ்புக் எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை




கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.

அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.

" நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட-நேரிடலாம்.


"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.

எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.


எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.


மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும்-நம்மை-காப்பாற்றும்.

மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம்-தெரிவிக்காதீர்கள்.

இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.

மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட-போய்விட-வாய்ப்புள்ளது.

மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள்,லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும்-சந்திக்க-வேண்டியதிருக்கும்.

அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது-குழந்தைகளை-கடத்தவும்-வாய்ப்புண்டு.

எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!


gravatar

FACEBOOK உங்களை விடுவதாக இல்லை.


பேஸ்புக்கில் இருந்து விடுபடுவது சுலபமானதல்ல

சனி, 18 ஜூன் 2011 13:11

பேஸ்புக் சமூக இணையத்தளம் வாயிலாக தங்களது தனிப்பட்டத் தரவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதி பெரும் எண்ணிக்கையானவர்கள் அண்மைக் காலத்தில் அந்த இணையத் தளத்திலிருந்து விலகிக் கொண்டனர்.

பிரிட்டனில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேஸ்புக் பாவனையாணர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பேஸ்புக்கை நீங்கள் விட்டாலும் அது உங்களை விடப்போவதில்லை என்பதுதான் புதிய தகவல்.

பேஸ்புக்கில் இருந்து விலகிக் கொள்வதை “பேஸ்புக் தற்கொலை” என்று வர்ணிக்கின்றார்கள். இந்தத் தற்கொலையை செய்து கொள்வது நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானதல்ல. இதற்கு இரண்டு வழிகள் உண்டு.ஒன்று உங்கள் பேஸ் புக் பக்கத்தை செயல் இழக்க வைப்பது.

மற்றது அதை முற்றாக அழித்து விடுவது. நீங்கள் இதை செயல் இழக்க வைத்தால் அது உங்களுக்கு உங்களின் பேஸ்புக் நண்பர்களின் படங்களையும்,செய்திகளையும் மீண்டும் மீண்டும் ஈ மெயில் வழியாக அனுப்பி அவர்கள் உங்களைத் தேடுகின்றனர்.

உங்களோடு தொடர்பு கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் கலந்து கொள்ளாமல் தவற விடும் வைபவங்கள் பற்றியும் அதில் பங்கேற்கும் உங்கள் நண்பர்கள் பற்றியும் அது உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

இதன் மூலம் இந்தக் கொடிய பேஸ்புக்கின் பிடியிலிருந்து நீங்கள் மீளவும் முடியாமல்,ஒரு நிலையான முடிவுக்கும் வர முடியாமல் அது உங்களை நிலை குலையச் செய்யும்.

மேலும் நீங்கள் உங்கள் பக்கத்தை முழுமையாக அழித்து அதை கைவிட்டாலும் உங்கள் நண்பர்கள் அதில் தங்களுக்கு விருப்பமானவற்றை தொடர்ந்து தரவேற்றம் செய்ய முடியும். எனவே பேஸ்புக் கொடுமையிலிருந்து நீங்கள் விடுபட நினைத்தாலும் இப்போதைக்கு அது உங்களை விடுவதாக இல்லை.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=23304%3A2011-06-18-07-47-37&catid=121%3A2010-02-24-14-26-50&Itemid=657

gravatar

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மோசடிகள் அதிகரிப்பு



பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருக்கின்றன என இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

பிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்து வருவதை கணினி மென்பொர...ுள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோ சொப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது.

பிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற பிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

பிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான பிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த பிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

http://www.vannimedia.com/home/?p=6606

gravatar

பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை என்று பிரிட்டனில் அதிகரிக்கும் பேஸ்புக் குற்றங்கள்!

 



பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன.

பாலியல், மிரட்டல், கொள்ளை, கொலை என எல்லா வகையான குற்றச் செயல்களும் பேஸ்புக் வழியாக இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
...
பேஸ்புக் பல குடும்பப் பிரச்சினைகளுக்கும், வாழ்க்கைப் பங்காளிகளுக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் கூட காரணமாகியுள்ளது. அதே போல் அது பல பிரச்சினைகளைத் தீர்த்தும் வைத்துள்ளது.

இந்த சமூக இணையத்தளத்தைப் பயன்படுத்தி சில குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் பேஸ்புக் வழியாகக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்தாண்டில் பேஸ்புக் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 6200 குற்றச் செயல்கள் பேஸ்புக் வழியாக இடம்பெற்றவை.

ஒரு மணிநேரத்துக்கு ஒன்று என்ற ரீதியில் பேஸ்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 14 வயதான ஒரு பெண் பேஸ்புக் வழியாக தொடர்பான ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோல் இன்னும் பல சம்பவங்களும் பேஸ்புக் வழியாக இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பேஸ்புக் வழியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.

சமூக இணையத்தளங்கள் அளவுக்கு அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21582%3A2011-05-05-06-59-05&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401
See More

gravatar

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

 

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

பேஸ்புக் போன்ற இணையத் தளங்களில் பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் அவர்கள் தங்களது பரீட்சைகளைக் கோட்டை விட்டு விடுவதாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பெற்றோர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தக் கவலையுடன் காணப்படுகின்றனர்.12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்...பட்டவர்கள் படிப்பு நோக்கத்திற்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவதை விட சமூக வலையமைப்புக்களிலேயே அதிக நேரத்தைக் கழிக்கின்றனர்.

மாணவர்களுள் அரைவாசிப்பேர் டுவிட்டர்,மை ஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்புக்களை தினசரிப் பாவிப்பவர்களாகவே உள்ளனர். 40 வீதமானவர்கள் இணையத்தளம் ஊடாக இசையை ரசிக்கின்றனர்.

16 வீதமானவர்கள் மட்டுமே தமது பாடசாலை வீட்டு வேலைகளுக்காக இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றின் முடிவிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக 4427 பெற்றோர்கள் மத்தியிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டில் தமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதே தெரியவில்லை என்று இந்தப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பிள்ளைகளுக்கு இது சம்பந்தமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தமது பொறுப்பு என்பதையும் அவர்களுள் 76 வீதமானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்டர்நெட்டில் பிள்ளைகள் என்ன பார்க்கின்றார்கள் என்பதைப் பெற்றோர் தெரிந்து கொள்ளக்கூடிய அல்லது அதைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு முறையை டோக்டோக் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21742%3A2011-05-09-09-41-37&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401 

gravatar

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல"

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.

 

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.

 

பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.

 

''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்'ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.

 

அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க', ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்' என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

 

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.

 

அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?

 

''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல'னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்' பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.

 

'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்'னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்' என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா

ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

 ( ஒரு வாரஇதழ்)