FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதை தாய்க்கு 43 ஆண்டுகள் சிறை

நியூயார்க்: அமெரிக்காவில் பாத்டப்பில் 13 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதை தாய்க்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

அமெரிக்காவில் கொலராடா மாநிலத்தில் உள்ள போர்ட் லூப்டன் பகுதியை சேர்ந்தவர் ஷன்னான் ஜான்சன் (34). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 13 மாத குழந்தையை தனி அறையில், பாத்டப்பில் விளையாட விட்டு, மற்றொரு அறையில் பேஸ்புக் இணையதள விளையாட்டில் மூழ்கினார். குழந்தையை மறந்தார். குழந்தை பாத்டப் தண்ணீரில் மூழ்கி  மூச்சு திணறி இறந்தது.

இது தொடர்பாக போலீசில் ஷன்னான் தனது தவறை ஒப்புக் கொண்டார். இவரை போலீசார் கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.  ‘தாயின் அஜாக்கிரதையால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி குழந்தை இறந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 43 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்என தெரிகிறது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் போது தண்டனை விவரம் அறிவிக்கப்படும்

gravatar

நீரில் மூழ்கி குழந்தை சாவு தாய்க்கு 43 ஆண்டு சிறை

Share
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

நியூயார்க்: அமெரிக்காவில் பாத்டப்பில் 13 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதை தாய்க்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
அமெரிக்காவில் கொலராடா மாநிலத்தில் உள்ள போர்ட் லூப்டன் பகுதியை சேர்ந்தவர் ஷன்னான் ஜான்சன் (34). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 13 மாத குழந்தையை தனி அறையில், பாத்டப்பில் விளையாட விட்டு, மற்றொரு அறையில் பேஸ்புக் இணையதள விளையாட்டில் மூழ்கினார். குழந்தையை மறந்தார். குழந்தை பாத்டப் தண்ணீரில் மூழ்கி  மூச்சு திணறி இறந்தது.

இது தொடர்பாக போலீசில் ஷன்னான் தனது தவறை ஒப்புக் கொண்டார். இவரை போலீசார் கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.  'தாயின் அஜாக்கிரதையால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி குழந்தை இறந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 43 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்' என தெரிகிறது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் போது தண்டனை விவரம் அறிவிக்கப்படும்

gravatar

இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவமொன்று,

உண்மைச் சம்பவம் :


சுகத் என்ற இளைஞர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் அதனை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கையில் கவிந்த்ரா என்ற பெண் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்புமடல் விடுத்துள்ளார்.

மற்றுமொரு இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிச்சியில் கவிந்த்ராவை இணைத்துக்கொண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக்கொண்டுள்ளார்.

சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற கவிந்த்ராவின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற்காகக் காத்திருந்த வேளை அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது.

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் கவிந்த்ரா. அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் சுகத்தின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.

ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப்பக்கத்தில் பதிவு செய்தார் சுகத்.

அதன்பின்னர் கவிந்த்ராவைக் காணவில்லை. சுகத்தின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை.

சுகத்தின் நண்பர் ஒருவர் கூறியதன் பிரகாரம்இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இதுதான் " உங்கள் கடவுச்சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் நவீனுடன் தொடர்பினை ஏற்படுத்தி பணம் செலுத்துங்கள்". இந்தத் தகவலின் பின்னர் சுகத் பாதுகாப்புக்காக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவைத் தொடர்புகொண்டுள்ளார்.

இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்களும் பணம் செலுத்தியவர்களும் இலங்கையில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

சுகத்தைப் போன்றவர்கள் மட்டுமன்றி பேஸ்புக்கில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ரொஷான் சந்திரகுப்தா.

தன்னைத் திருமணம் முடிக்கத் தவறிய ஆண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இளம்பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ள விடயம், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களை கேளிக்கையாக்கிய சம்பவம், கடவுச்சொல்லைத் திருடி பேஸ்புக் புகைப்படத் தொகுப்பில் நீலப்படங்களை இணைத்துவிட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நாம் இங்கு உதாரணமாகக் கூறலாம்.

இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

1. அடையாளம் தெரியாத நபர்களின் வேண்டுகோள் மடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள்

2. நீங்கள் அறிந்திராத நபர்களிடமிருந்துவரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களை சொடுக்கிப் பர்வையிடாதீர்கள்.

3. சமூக வலைப்பின்னல்களில் திடீரெனத் தோன்றும் தொடுப்புகளை அகற்றிவிடுங்கள்.

4. உங்களுக்கென உள்ள சொந்தத் தகவல்களை தரவேற்றம் செய்யாதீர்கள்

இவை அடிப்படையான சில விடயங்களேயன்றி உங்கள் மின்னஞ்சல் கணக்காயினும் பேஸ்புக் அல்லது மாற்றுக் கணக்குகளாயினும் பொது இடங்களில் உபயோகப்படுத்துதலிலும் ஏனைய பாதுகாப்புகளிலும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். பேஸ்புக் கணக்குகளில் வேட்டையாடும் நபர்களைத் தவிர வலைப்பதிவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட இணையப் பாவனைப் பக்கங்களை முடக்குவதிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைமுறை உலகில் இணையம் தொடர்பான எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் திருட்டுச் செயல்களையும் 'சைபர் க்ரைம்( Cyber Crime)' என அழைக்கிறார்கள்.

அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை உலகுக்கு எடுத்துக்காட்டிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தற்போதைய நடவடிக்கைகளை அடுத்து இச்சொல் இணையப் பாவனையாளர்களிடையே மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

ஆகையால் இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அவ்வாறானதொரு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேர்ந்தால் slcert@slcert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு தொடர்புகொண்டு உதவி கோர முடியும். இலங்கையைப் பொருத்தவரையில் கடவுச்சொல் திருட்டு மற்றும் ஏனைய முறைகேடான விடயங்கள் குறித்து அனைவருமே தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.

நிகழ்கால உலகில் இளம்பராயத்தினர் இணைய உலகிற்குள் வெகுசீக்கரமாகவே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் இணையத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

ஆக, எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கரங்களிலேயே தங்கியுள்ளது. உலகமயமாக்கலிலும் தொடர்பாடலிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரியதொரு மாற்றத்தைக் கண்டுவரும் இணையத்தின் அபார வளர்ச்சியின் போக்கில் எமது பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுகொள்ள வேண்டும்.

gravatar

பேஸ்புக் (Facebook) பற்றிய தற்கால நிலைமை என்ன??

உலகிலுள்ள 14பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவர்களாக உள்ளனர். கடந்தவாரம் வரையில் 520மில்லியன் அங்கத்தவர்கள் மாதமொன்றுக்கு 70 ஆயிரம் கோடி நிமிடங்களை அங்கத்தவர்கள் இணையத்தளத்தில் செலவழிக்கின்றனர் 150 மில்லியன் பேர் தமது கைத்தொலைபேசிகளில் பேஸ்புக் இணைப்பைக் கொண்டுள்ளனர். ஒரு அங்கத்தவருக்கு சராசரியாக 130 நண்பர்கள் தற்போதைய நிலையில் உலகளவில் வயது வித்தியாசமின்றி மிகவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற அன்றேல் பரவி வியாபித்துவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் பேஸ்புக் என்பதாகத்தான் இருக்க முடியும்.


2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக் இணையத்தளத்தில் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் 500மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள்; அன்றேல் பயனாளர்கள் உள்ளதான தகவல் ஆச்சரியமிக்கதாகவே அமைந்திருக்கும்.

பேஸ்புக் இணையத்தளத்தில் முதல் 100 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துகொள்வதற்கு 1665நாட்கள் எடுத்தன .2008ம் ஆண்டு ஒகஸ்ற் 26ம்திகதியே 100 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.

அதற்குப்பின்னர் அசூர வேகத்தில் பேஸ்புக்கின் அங்கத்துவம் கூடிக்கொண்டு செல்கின்றதை நோக்கமுடியும் 100மில்லியனில் இருந்து 200மில்லியன் எண்ணிக்கையைத் தொடுவதற்கு 225நாட்களும் 300மில்லியனைத் தொடுவதற்கு 160நாட்களும் 400மில்லியன் எண்ணிக்கையை எட்டுவதற்கு 143நாட்களும் 400ல் இருந்து 500மில்லியனைத் தொடுவதற்கு 166நாட்களும் எடுத்துள்ளன.

தினமும் லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதிதாக பேஸ்புக் அங்கத்தவர்களாக இணைந்துகொண்டிருப்பதன் காரணமாக ஜுலை மாத பிற்பகுதியில் 500மில்லியன்களை எட்டிய பேஸ்புக் இணையத்தளத்தின் ஒக்டோபர் ஆரம்பத்தில்  அங்கத்தவர்கள் எண்ணிக்கை 520மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.

அமெரிக்கா கனடா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவர்கள் பேஸ்புக்கின் தீவிர அங்கத்தவர்களாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. உலகளவில் பேஸ்புக் வளர்ச்சி வரைபு பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு சராசரியாக 130 இணைய நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சனத்தொகையில் 14 பேரில் ஒருவர் தற்போது பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் என்ற செய்தி ஒருபக்கம் அதன் அசூர வளர்ச்சியைக் காண்பித்தாலும் மறுமுனையில் நமது சமூகத்தில் ஏற்பட்டுவருகின்ற சமூக கலாசார மாற்றத்தினையும் காண்பித்து நிற்கின்றதென்றே கூறவேண்டும் . ஓய்வின்றி மக்கள் உழைத்துக்கொண்டிருக்கின்ற பரபரப்பான உலகத்தில் நண்பர்களின் பிறந்தநாள்களை நினைவில் வைத்திருப்பது ஒருநண்பரின் இணையத் தோட்டத்திற்குள் சென்று பச்சியை விடுவது காய்கறிகளைப் பரிசளிப்பது என்பதையெல்லாம் பேஸ்புக் வந்ததன் பின்னரே சாத்தியமாகின. பிறந்தநாள் திருமணங்கள் பட்டமளிப்பு விழாக்கள் பதவியுயர்வுகள் வருடாந்த நிறைவு தினக்கொண்டாட்டங்கள் போன்ற பல தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கூட சுடச்சுட பேஸ்புக் ஊடாக பரிமாறப்படுகின்றன தகவல்கள் மட்டுமன்றி புகைப்படங்களும் ஏன் பிடித்த பாடல்களும் கட்டுரைகளும் கூட பேஸ்புக்கில் பரிமாறப்படுகின்றன.

வீடுகள் அலுவலகங்கள் பொது இடங்கள் ஏன் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் தாம் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பேஸ்புக் இணைய வலையமைப்பில் அதிகமதிகமாக நேரத்தை செலவிட்டு வருவதனை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .

பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்கள் ஒவ்வொருமாதமும் அண்ணளவாக 700 பில்லியன் நிமிடங்களை செலவிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஓவ்வொரு மாதமும் பேஸ்புக் அங்கத்தவர்கள் 30பில்லியனுக்கு அதிகமான புகைப்படங்கள் செய்திக் கட்டுரைகள் இணையத்தளங்களுக்கான தொடர்புக் குறிகாட்டிகள் போன்றவற்றை பேஸ்புக் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

பேஸ்புக் என்பது ஒரு தனிநாடாக கருதப்படுமானால் அது சீனாவிற்கு இந்தியாவிற்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்டநாடாக இருக்கும் அத்தோடு பேஸ்புக் 70 உத்தியோகபூர்வ மொழிகளில் உள்ளமையால் அதன் பல்கலாசாரத்தன்மையை எந்தவொருநாட்டாலும் இலகுவில் எட்டிவிடமுடியாது இது பேஸ்புக்கின் பாரிய பரிணாமவளர்ச்சிக்கு சான்றுபகர்வதாகவும் அமைந்திருந்தது.

உலகில் இலங்கை உட்பட 212 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் .ஆகக்கூடுதலாக அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக பேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்கா திகழ்கின்றது அமெரிக்காவில் 133மில்லியன் பேர் பேஸ்புக் அங்கத்தவர்களாக திகழ்கின்றனர். 260 அங்கத்தவர்களுடன் ஆகக்குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக நாரு(யேரசர) உள்ளது.

முதல் பத்து நாடுகள்

அமெரிக்கா - 133 மில்லியன்

பிரித்தானியா- 28 மில்லியன்

இந்தோனேசியா- 27 மில்லியன்

துருக்கி- 24 மில்லியன்

புpரான்ஸ்- 19 மில்லியன்

இத்தாலி- 17 மில்லியன்

பிலிபைன்ஸ் 16 மில்லியன்

கனடா- 16 மில்லியன்

மெக்ஸிகோ 15 மில்லியன்

இந்தியா- 13 மில்லியன்

இலங்கையில் பேஸ்புக்கின் தாக்கம் எப்படியுள்ளது?

674,480 அங்கத்தவர்களுடன் இலங்கை இந்த வரிசையில் 74வது இடத்திலுள்ளது .இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3.14வீதமென்பதுடன் இணைய வசதியுடையவர்களில் மூன்றிலொரு பங்கு(37.97மூ) என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

இலங்கையில் பேஸ்புக் அங்கத்தவர்களில் 435,040 பேர் ஆண்களாகவும் 228,740 பேர் பெண்களாகவும் உள்ளனர்

அறிமுகமான ஆரம்பத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே பிரபலமாகியிருந்த பேஸ்புக் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்களையும் வேகமாக கவர்ந்து அதன் வலையமைப்பில் உள்வாங்கிவருகின்றது.

காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்படி அன்றேல் தேநீர் கோப்பி அருந்துவது போன்று தற்போது காலை எழுந்ததுமே பல்துலக்காமல் பேஸ்புக் பார்க்கும் பழக்கம் ஒருசாரரிடையே ஏற்பட்டுள்ளது காலையில் மாத்திரம் என்றால் பரவாயில்லை நாள் பொழுதிலும் ஏன் பின்னிரவுவேளையிலுமே பேஸ்புக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இலங்கையிலுள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுவதனை அறியமுடிகின்றது காலையில் வேலைக்கு வந்தவுடனேயே இறைவனுக்கு வழிபாடுசெய்கின்றனரோ இல்லையோ பேஸ்புக் இணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே பணியை ஆரம்பிக்கின்றனர் பணியாளர்கள்; அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிட்டு நேரடிவீணடிப்பு செய்வதால் சில நிறுவனங்களில் பேஸ்புக் பார்ப்பதையே தடைசெய்கின்ற நிலைமையும் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது இதே நிலைதான் உலகின் ஏனைய பல இடங்களிலும் காணப்படுகின்றது.

பேஸ்புக் என்ற கட்டாற்றுவெள்ளத்தில் அதனை விரும்பாதவர்களும் இழுத்துச்செல்லப்படுவது தவிர்;க்க முடியாததாகிவிட்டுள்ளது பேஸ்புக் ஏற்படுத்திவிட்டுள்ள கலாசார மாற்றம் என்பது நம்மால் அதனை புறக்கணித்துவிட்டு இருந்துவிடமுடியாது என்பதையே யதார்த்த நிலை உணர்த்திநிற்கின்றது இதற்கு உதாரணமாக பேஸ்புக்கில் இணைய தனிப்பட்டரீதியில் ஒருவர் விரும்பாதவிடத்தும் தமது உறவினரின் புகைப்படத்தை பார்பதற்கோ அன்றேல் தமது நிறுவனத்தினை விளம்பர ஊக்குவிப்பிக்காகவோ இதில் இணைந்துகொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டமுடியும்.

பேஸ்புக்கை நாம் மூன்றாம் தரப்புவிடயம் என புறக்கணத்து இருந்துவிடமுடியாது என்பதற்கு அதன் சமூகத்தில் அது ஆழமாக ஊடுருவியிருப்பதும் மற்றுமொரு முக்கிய காரணமாகும் .பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் பிள்ளைகள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் அன்றேல் சகோதரர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் .அந்த வகையில் இதனை அறிந்துவைத்திருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியும் உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக் துணைசெய்கின்றது என்பதே பேஸ்புக் இணையத்தளத்தின் விருதுவாக்காக உள்ளது ஒருகோணத்தில் பார்த்தால் இது மிகவும் உண்மை போன்றே தெரிகின்றது.

ஆனால் பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்துக்கொண்டு அதனை தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் செய்திகளையும் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் .

பேஸ்புக்கின் சார்பாக குரல் கொடுப்பவர்கள் அதிலே ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்கின்ற வடிவமைப்புக்களைச் செய்யமுடியும் என தமது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.

இருந்தபோதிலும் பேஸ்புக்கினால் பல அபாயங்கள் உள்ளதாகவும் அதிலே முக்கியமான கவனிக்கப்படவேண்டடிய மறைவான ஐந்து அபாயங்களை இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அபாயங்கள்

எமது விபரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன பேஸ்புக் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும் போது இரகசியத்தன்மை கட்டமைப்புக்கள் பாதுகாப்புக்குறைவான நிலைக்கு தள்ளப்படுகின்றது

பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றியே கணனிகளின் மென்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் நாசகார மென்பொருட்களை தாங்கிவரக்கூடியவை

உங்களது உண்மையான நண்பர்கள் தெரியாமலேயே உங்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டுசெல்கின்றனர் வேண்டத்தகாதவர்கள் உண்மையான பெயர்களில் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்குகின்றனர்

பேஸ்புக்கை மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற நவீன ஊடகமாக பார்க்கப்படுகின்றது. குரலற்ற மக்களின் குரலாக பேஸ்புக்கை பயன்படுத்தப்படுவதை பல்வேறு செய்திகளின் போது நாம் அவதானிக்கின்றோம் .உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்ற மக்களின் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரதான மற்றும் பாரம்பரியரிய ஊடகங்களால் மறைக்கப்படுகின்ற செய்திகளை பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்.

மறுமுனையில் இந்திய அரசிற்கு சார்பானவர்கள் காஷ்மீர் பிரச்சனை பற்றிய தமது நிலைப்பாடுகளைத் தாங்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமை காணமுடியும்.

விரும்பத்தகாத தகவல்கள் பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக அதற்குள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி தகவல்களை சேகரிப்பதான செய்திகளும் கடந்தநாட்களில் வெளியாகியிருந்தன பேஸ்புக்கிற்கு எதிரான முறைப்பாடுகள் தமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்துதல் திரிவுபடுத்துதல் தவறாக பிரசுரித்தல் ஆகியனவே பேஸ்புக்கிற்கு எதிரான உலகளாவிய முறைப்பாடுகளில் பொதுவானதாக காணப்படுகின்றது.

இலங்கையில் கூட பேஸ்புக் குறித்து பல முறைப்பாடுகள் வெளியாகியிருப்பதை செய்திகளில் பார்த்திருக்கின்றோம் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளில் அனேகமானவை நண்பர்களாக இருந்து பின்னர் கோபித்துக்கொண்டவர்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் பேஸ்புக்கில் இருந்தோ வேறு இணையத்தளங்களில் இருந்தோ தரையிறக்கம் செய்த புகைப்படங்களை திரிவுபடுத்தி ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் அன்றேல் வேறு இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளமை பற்றியதாகவே உள்ளதென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சி ஐ பாலச்சந்திர தெரிவித்தார் .

கருத்துவெளியிடுகையில் என இவ்வாறான ஆறு பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எனக் குறிப்பிட்டாh.; இதனைத்தவிர போலிவிபரங்களைத் தெரிவித்து சிறுவயது பெண்களுடன் காதல்தொடர்புகளை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றமை போன்ற முறைப்பாடுகள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றோம் .

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

1 . எவரும் பார்க்கக்கூடாதென நீங்கள் எண்ணுகின்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாதீர்கள் .

2 . நிஜவாழ்வி;ல் நண்பர்கள் வட்டாரத்தில் இல்லாதவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்த்துக்கொள்ளாதீர்கள்

3 . பேஸ்புக் இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பயன்படுத்தும் வகையில உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .நமது மூன்றாம் தரப்பினரிடம் முடியுமானவரையில் வழங்கக்கூடாது

4 . பெற்றோர்கள் இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தமது பார்வைக்குப்படும் இடத்திலேயே இல்லங்களில் கணனிகளை வைத்திருக்கவேண்டும்

குறிப்பு இது ஏனைய சமூக இணையத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

பேஸ்புக் தவிர 100ற்கு மேற்பட்ட சமூக இணையத்தளங்கள் உள்ளன .பேஸ்புக்கிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் ஆரம்பத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது எனினும் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதனை பேஸ்புக் முறியடித்தது அதற்கு பின்னர் பேஸ்புக்கின் வளர்ச்சி அபரிமிதமானது .பேஸ்புக் அளவி;ற்கு இல்லாவிட்டாலும்

twitter, Orkut, tagged, hi5, bebo, frienster, buzz ஆகியனவும் எம்மவர்களிடையே ஒரளவிற்கு அறியப்பட்ட சமூக இணையத்தளங்களாக உள்ளன.

இறுதியாக ஒன்றைக் கூற வேண்டுமெனில் எமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆகவே நாம் நம்மை எப்படி நிஜவாழ்விலும் இணையத்தளங்களிலும் வெளிப்படுத்துகின்றோமே அதுவே எமக்கு சாதகமான அன்றேல் பாதகமான விளைவுகளைக்கொண்டுவருகின்றது எனவே ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் பாதக விளைவுகளை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதே எனது கருத்தாகும் .

gravatar

ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதா?

300mark 
Posted by ஈழமாறன் On January - 26 - 2011 0 Comment
பேஸ்புக் உருவாக்குனர் மார்க் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது பேஸ் புக் பக்கத்தில் அவர் பதிவு செய்தது போல செய்தி ஒன்று இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

Let the hacking begin: If facebook needs money, instead of going to the banks, why doesn't Facebook let its users invest in Facebook in a social way? Why not transform Facebook into a 'social business' the way Nobel Price winner Muhammad Yunus described it? http://bit.ly/fs6rT3 What do you think? #hackercup2011
அதாவது பேஸ்புக்கிற்கு பணம் தேவையென்றால் வங்கிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை, ஏன் பேஸ்புக் அதன் பாவனையாளர்களை அதில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சமூக வியாபரம் போன்றதாக மாற்றக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹெக் செய்யப்பட்டு குறிப்பு பதிவுசெய்யப்பட்ட சில நேரத்திலேயே இக்குறிப்பு அகற்றப்பட்டமையானது இது ஹெக் செய்யப்பட்டமையை உறுதிசெய்வதாக இணையத்தளங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும் அவ்வாறு அகற்றப்படுவதற்கு முன்னரே பலர் இப்பதிவினை வாசித்திருந்ததுடன் தங்கள் விமர்சனங்களையும் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

gravatar

ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார்

 

ஆன்லைன் குழு மூலம் மகாத்மா காந்தியின் மதிப்பை இழிவுபடுத்துவதாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.


...உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.


தவறான வகையில் காந்தியின் உருவப்படத்தை வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பிவருகிறது என ஃபேஸ்புக் குழுவுக்கு எதிராக அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.

காந்தி குறித்து ஆபாசமான வார்த்தைகள் அந்த ஆன்லைன் குழுவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் இதுபோன்று வெளியிடப்பட்டுள்ளதாக தாகூர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

http://www.tharavu.com/2011/01/blog-post_7868.html

gravatar

‎"பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது

 


இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக்.
...

பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். அமெரிக்காவின் கலிபோர்ன...ியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார்.

பேஸ்புக் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட அது குழப்பியுள்ளதாகவும், மார்க் சுகர்பேர்க் அளித்துள்ள பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த இணையத்தள சமூக வலையமைப்பு 2011 மார்ச் 15ல் மூடப்படும் என தெரியவருகின்றது.

பேஸ்புக் மூடப்படும் பட்சத்தில் அதில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் தரவுகளை யாரும் அதற்குமேல் பார்க்க முடியாது. எனவே தனி நபர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலும் கூட சிலர் இது ஒரு வதந்தி என்றும் இதை நம்பத் தயாரில்லை என்றும் மறுத்து வருகின்றனர். பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைபின்னல். இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 146 மில்லியன்பேர் அமெரிக்கர்கள். இரண்டாவது இடத்தில் 32 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தோனேஷியா திகழ்கிறது.

http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=707

gravatar

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்"

பெரும்பாலும் பலருடைய திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட முக்கிய காரணமாக பேஸ்புக் இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
...கடந்த ஒன்பது மாத காலமாக தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே முக்கியமாக பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.

குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தம்பதியினர் கூட வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

lankasri world news http://www.newsonews.com/view.php?224Q08qc202pnBZd4e2eUOldacb0eCAAeddeAAMMe0bcadlOA3e4dZBnB3202cq80Q42

gravatar

சர்கோசியின் பேஸ்புக் கணக்கு களவு போனது

 

செவ்வாய்க்கிழமை, 25 சனவரி 2011, 04:37.41 பி.ப GMT ]

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பேஸ்புக் கணக்கு இணைய சமூக விரோதிகள் சிலரால் திருடப்பட்டுள்ளது. திருடிய நபர் கடவுச்சொல் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றியுள்ளதுடன் நகைச்சுவை பாணியிலான சில வாசகங்களையும் சர்கோசியின் பேஸ்புக் பக்கங்களில் போட்ட...ு வருகிறார்.
2012 இல் மறு தேர்தல் நடத்துவதற்கான முனைப்பில் தீவிரமாக அதிபர் செயலாற்றி வருவதைப் போன்ற பொய்யான தகவல்களை சர்கோசி பெயரிலேயே இணையத் திருடர்கள் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் களவாடி விட்டதாகவும் அதில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கும் தனக்கு சம்பந்தமில்லை என்பதை நிக்கோலஸ் சர்கோசி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த விசாரணையிலும் தொடர்ந்தும் சர்கோசியின் பேஸ்புக் பக்கங்களில் திருடர்கள் தகவல்கள் அளிப்பதை தடுக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Lankasri world http://www.newsonews.com/view.php?22AOld0bcE80Qd4e3AMM202cBnB2ddeZBnp203eCAA2e4W08qacb2lOe42

gravatar

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.
...
ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

lankasri technology news http://www.z9tech.com/view.php?22AOld0bcX90Qd4e3AMM202cBnB3ddeZBn5203eCAA2e4U09racb3lOI42
See More

gravatar

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

 


பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
...
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?

இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள் பின்னர்

அங்கு ஐபி முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை "end activity " செய்துவிடுங்கள்.

மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும் , மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் திக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது sms இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.



Technology News

gravatar

ஃபேஸ்புக்கும் சில அதிர்ச்சித் தகவல்களும்

 

உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் கழிக்கிறார்கள்.அத்துனை தூரம் ஃபேஸ்புக் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது.விளைவு, ஃபேஸ்புக் பற்றிய செய்திகள் நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.அத்தகைய செய்திகளுள் சில நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும் பல நம்மை பயமுறுத்தவே செய்க...ின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.அத்தகைய பயமுறுத்தும் ஃபேஸ்புக் பற்றிய செய்தி ஒன்றைத்தான் நீங்கள் படிக்க இருக்கிறீர்கள் இந்தப் பதிவில். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சம்பவம் இது.ஒரு ஆஸ்திரேலியப் பெண், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இளம்பெண்களை தனியாக விமானப் பயணம் செல்ல அனுமதிப்பதற்க்கு மிகுந்த அச்சமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்!

திடீரென்று ஏனிந்த அச்சம்? கேட்கத்தோன்றுகிறதல்லவா? சரி, இதற்க்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த அச்சத்திற்க்கு அடிப்படை காரணமே ஃபேஸ்புக்தான் என்கிறார் மெல்போர்னை சேர்ந்த அந்த பெண்.அதாவது, சர்ச்சைக்குறிய இந்தப் பேட்டியை அளித்த அந்த பெண் 15, 16 வயதான இரண்டு இளம் பெண்களின் தாய்.நடந்தது என்னவென்றால், இந்த இரண்டு பெண்களும் சமீபத்தில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சென்ற அந்த விமானத்தின் ஆண் உதவிப் பணியாளர் ஒருவர் கழிவறை செல்லுமிடத்திற்கு வெளியில் இவர்கள இருவரும் நிற்கையில் நைசாகப் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.ஆனால் உஷாரான இந்த பெண்கள் இருவரும் தங்கள் பெயரைக்கூட சொல்லாமல் நழுவியிருக்கிறார்கள்.ஆனால், அவர்கள் இருவரும் வீடு சேர்ந்து சில மணி நேரத்திற்குள்ளாகவே அந்த விமானப் பணியாளரிடமிருந்து இவர்களுக்கு ஃபேஸ்புக் நட்பு விண்ணப்பம் ஒன்று வந்திருக்கிறது என்கிறார் இந்த பெண்களின் தாய்!

அந்தப் பெண்மணி விமான பதிவுக்கோப்புகளிலிருந்த இந்த இரு பெண்களின் விபரங்களை எடுத்துத்தான் அந்த உதவிப் பணியாளர் இவர்களுக்கு ஃபேஸ்புக் நட்பு விண்ணப்பம் கொடுத்திருக்க முடியும் என்கிறார், ஆனால் விமான நிறுவனமோ இல்லை அவர்கலின் போர்டிங் பாசிலிருந்துதான் அந்த நபர் விபரங்களை எடுத்திருப்பார் என்று மறுத்திருக்கிறது! எது எப்படியோ, அந்த பெண்ணின் கூற்றுப்படி அந்த ஆண் விமானப் பணியாளர், விமானப்பயணிகளின் குறிப்பாக சிறுவயது பெண்களின் விபரங்களை எடுத்து அவர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் இருப்பது மிகுந்த அச்சத்தைத் தருகிறது!



அதிர்ஷ்டவசமாக என் மகள்கள் அவரை நிராகரித்து விட்டார்கள்.ஆனால் எனக்குத் தெரிந்து சில பள்ளி செல்லும் சிறு வயதுப் பெண்கள் ஒருவித விளையாட்டுத்தனத்தினால் "ஏய்…ஒரு வயதான விமான பணியாளர் எனக்கு ஃபேஸ்புக்கில் நட்பு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்…சரியென்றி சொல்லித்தான் பார்ப்போமே என்னதான் ஆகிறதென்று" என்று சமயங்களில் செய்வதுண்டு என்கிறார்.மேலும் அவர், இத்தகைய செயல்கள் கடைசியில் எங்கு சென்று முடியும்? தன்னை தங்கள் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் சேர்த்துவிட்ட பின் அந்த மனிதர், சரி……நாம் எங்கு/எப்போது சந்திக்கலாம் என்பதில்தானே? என்று கேள்வி எழுப்புகிறார் அந்த தாய்! முற்றிலும் உண்மைதானே?


<!-- adSurroundStart --><!-- adSurroundClose -->ஜெட்ஸ்டார் என்னும் அந்த விமான நிறுவன செயளாலர் இதுகுறித்த விசாரனை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.சம்பந்தப் பட்ட அந்த விமானப் பணியாளரை குற்றச்சாட்டு குறித்த பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதெல்லாம் சரி, இந்தப் பதிவு நம் நாட்டுக்கு எந்த அளவுக்கு தொடர்புடையது என சிந்தித்தோமானால், சமீப காலங்களில் மிக மிக அதிகப்படியான மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் போன்றோரை இந்த ஃபேஸ்புக் மோகம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதாகவே நான் அறிகிறேன். ஆகையால், இது போன்ற செய்திகளை படிக்கும் பொழுது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் நன்மைக்காக பயன்படுதைவிட இதுபோன்ற விபரீதங்களுக்கே பெரிதும் துணைபோவதாகத் தோன்றுகிறது!

எனவே இப்பதிவின் மூலம் நண்பர்களனைவருக்கும் நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், அனாவசியமாக மிக முக்கியமான சுய விபரங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் குறிப்பிட வேண்டாம்,முக்கியமாக பெண்கள்! அவ்வாறு குறிப்பிடுவதன் மூலமாக நாம் அடையும் லாபங்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.ஆனால் விபரீதங்கள் என்று பார்த்தால் பட்டியலிட இந்தப் பதிவு போதவில்லை என்பதே உண்மை.ஆகவே கவனமாக இருங்கள்! உலகில் நல்லவர்கள் ஏனோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள்!




நன்றி! :padmahari

gravatar

உங்களுக்கு வெட்கம் இல்லையென்றால் விரும்பியதை செய்வீர்கள் !

‎"வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 
 ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் 'பேஸ்புக்' போன்ற இணையதளங்களில் தங்கள் புகைபடங்களை போட்டுக் கொண்டு வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்கள்...(சில).
 
இவர்களுக்கு வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?

gravatar

கற்பொழுக்கத்துடன் ஆண்களும் இருக்க வேண்டும்

gravatar

பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK

 

FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம். இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும். ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள் என்றால் அதை ஒ...ரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின் நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும் நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும் உங்களுக்கும் கிடைத்து விடும்.

சகோதர சகோதரிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள்

நன்றி Il

gravatar

பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை



பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது.


...இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.


அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது.


ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.


பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) http://www.facebook.com/pages/Sophos/28552295016 என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

gravatar

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

 
பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப...
்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.

இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.


தினக்குரல் செய்தி
See More

gravatar

Facebook Crime and Punishment


As we're sure you're all aware by now, Facebook, when used recklessly, can get you into trouble. Firings, break-ups and general forehead-slapping missteps are no strangers to the social networking site. But Facebook trouble can be much more grave than all that. Look behind the break and catch a glimpse of Facebook's dark criminal underbelly, if you dare.

Blackmail
Sending any personal info or incriminating pictures to someone on Facebook is a huge mistake for many reasons. One of the
worst possible outcomes is getting blackmailed for money, sex, or, well, anything these sickos dream up. Really, whether they're using a fake profile or not, it's a horrible idea. Read up on the story of an 18-year-old who blackmailed 31 male classmates after he posed as a girl and asked for nude pictures. That's lesson enough.

Impostors
Sure, it can be harmless to
impersonate a celeb online or create a fake profile for a movie character. But seriously, there's a definite line you shouldn't cross when pretending to be someone else and it can lead to dire consequences for you. Maybe it's not as extreme as the Moroccan man who was jailed for 43 days after creating a fake Facebook profile of a prince, but you never know. Just steer clear of it.

Self-Incrimination
Do we really have to explain this? Just look up the
shoplifter who posed with her stolen merchandise, the many photos of drunk underage teens, and, most recently, the album featuring a couple who killed and ate an endangered iguana in the Bahamas.

Suicide
Social networking sites has been blamed for a lot of things, fairly and unfairly, but in our opinion, the worst offense has been their indirect involvement in suicides. Obviously, there are a lot of factors responsible in each case, but there does seem to be links between
social networking and a rash of suicides, and obviously there's the tragic case of Megan Meier, who killed herself after a classmate's mom impersonated a teen boy and harassed her over Myspace.

Murder
We've reported on numerous incidents of people getting in trouble because of their online behavior. Now, people are becoming victims because of what they're doing on the Web too. In England, a man was
convicted of murdering his estranged wife after she changed her relationship status to "single." So, be careful of who can see your profile and what you're doing, no matter how harmless it seems.

Nigerian Scammers
Oh, you thought
this only happened via poorly worded emails, right? Wrong. Once people got wise to their old ways, these con men started turning to social networking sites for new targets. Now, they're hacking into people's accounts and impersonating them to ask for money, usually with some weird sob story. You can check out a transcript of one of these conversations here.

Cooperation
Even
if the law isn't on a case, a victim, his friends, or empathetic strangers might be. Since it's easy to get word out for anything online, people are using blogs, forums, and social networking sites to help track down criminals. In one such case, a vehicle thief was tracked down by a bunch of anonymous car enthusiasts after the victim posted his story on a forum. In the end, they identified the guy through his Facebook profile.

gravatar

சவுதி "பேஸ்புக்' இணையதளத்திற்கு நெருக்கடி

gravatar

அமெரிக்க விமானப் படை அதன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


வாஷிங்டன்: பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க விமானப் படை அதன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இணையதளங்களில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களின் மூலம் எதிரிகள் போர் பகுதிகளில் விமானப் படை வீரர்கள் இருக்கும் இடத்தை துள்ளியமாகக் கண்டுபிடிக்க முடியும்...
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத துவக்கத்தில் அமெரிக்க விமானப் படை வீரர்களுக்கு விமானப் படை இணையதளம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. விமானப் படை வீரர்கள் சமூக இணையதளங்களை அஜாக்கிரதையாக பயன்படுத்துவது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் மூத்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் அவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வீரர்களை எச்சரிக்கக்கூடும்.

பேஸ்புக், போர்ஸ்கொயர், கோவல்லா மற்றும் லூப்ட் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் அந்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். உலக வரை படத்தில் துள்ளியமாக எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறியலாம்.

இதன் மூலம் எதிரிகள் போர் பகுதிகளில் படை வீரர்கள் இருக்கும் இடத்தை அவர்கள் வைத்திருக்கும் பிளாக்பெர்ரி உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக இணையதளங்கள் மூலம் எளிதாக கண்டறியலாம்.
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/18-us-air-force-facebook.html
See More

gravatar

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் விடுக்கும் எச்சரிக்கை



ஐக்கிய இராச்சியத்தில் 26 மில்லியன் பேஸ்புக் பாவிப் போரும் 18 மில்லியன் ருவிற்றர்ஸ் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் இவர்களிற் பலர் தமது விடுப்புக் கால உல்லாசப் பயணம் பற்றிய தகவலை மேற் கூறிய இணைய தளங்களில் வெளியிடுகின்றன

இந்தத் தகவலைத் தமது திருட்டு நடவடிக்கைகளுக்குப் ப...
யன்படுத்தும் கும்பல்கள் பூட்டிக் காலியாகக் கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிக்கின்றனர். இப்படியான சம்பவங்களுக்குத் தம்மால் இழப்பீடு வழங்க முடியாதென்று பிரித்தானியாவின் காப்புறுதி நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது

வீடுகளைத் திருட்டுச் சம்பவங்களுக்கு எதிராகக் காப்பீடு செய்வோர் தமது உல்லாசப் பயணத் திட்டங்களை வெளிப்படுத்துவதால் காப்புறுதி நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன எதிர்காலத்தில் தமது வீடு காலி என்று விளம்பரப் படுத்துவோருக்கு இழப்பீடு வழங்க முடியாதென்று காப்புறுதிச் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
http://www.eelampress.com/2010/11/6140/
See More

gravatar

போதை மருந்து கடத்த பேஸ்புக் வாயிலாக ஆள் தேர்வு



மலேஷியாவில் இளம் பெண்களை போதை மருந்து கடத்தல் தொழிலுக்கு பேஸ் புக் வாயிலாக வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக பரபரப்பு புகாரினை அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மலேஷிய வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட்ரையாட் கூறுகையில், மலேஷியாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் அதி...கரித்து வருகிறது. இவர்கள் சிண்டிகேட் அமைத்து போதை மருந்தினை கடத்தி வருகின்றனர்.
 
இவர்களில் ஆப்ரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். இவர்கள் சீனா, ஜப்பான், லத்தீன் அமெரி்க்கா நாடுகளுக்கு போதை மருந்து கடத்துகி்ன்றனர். மேலும் இவர்கள் மீது மலேஷிய போலீசார் கண்காணித்து வந்தாலும் அதனை முறியடிக்க தற்போது மலேஷிய நாட்டு இளம் பெண்களை பேஸ் புக் எனும் சமூக வலைதளம் வாயிலாக வேலைக்கு ஆள் எடுப்பது போன்று நியமித்து கடத்தல்தொழிலில் ஈடுபடுத்துகி்ன்றனர். இவர்கள் டூரிஸ்ட் வழிகாட்டி என தங்களை அறிமுகப்படுத்தி இத்தகைய தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றார்.See More

gravatar

தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தர...
த்தில் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக பேஸ்புக் மூலம் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குறித்த மாணவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அப்போது மாணவியின் வீட்டுக்கும் அவர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து லண்டன் சென்றது முதல் குறித்த மாணவியை அந்த இளைஞர் நிராகரிக்கத் தொடங்கியதாகவும் இதனால் மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.இணையமூடாக தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் இளைஞர் அவற்றை நிராகரித்த காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26474
See More

gravatar

நீங்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருபவரா? எச்சரிக்கை இதோ 10 முக்கிய ரகசியங்கள்


ஃபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட் வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்ல...து ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'Data Mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும்

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர்

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம்

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் (Identity Theft) மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள்

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள்

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள்

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள்

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம்

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள்

இதுவும் அடையாளத் திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது

gravatar

பேஸ்புக் இணையதள நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா?



லண்டன் : "பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்; இதுபோன்ற "ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 "பேஸ்புக்' நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த...
்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.


இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது "பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


இந்த தற்கொலை சம்பவம் "பேஸ்புக்' இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.


தற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், "பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு "நண்பர்கள்' என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.


"தனக்கு எது நடந்தாலும் "பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


"பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் "பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=162577
See More

gravatar

விவகாரங்களுக்கு வலைவிரிக்கும் பேஸ்புக், ருவிட்டர் வலைத்தளங்கள்



உலகம் வேகமாக தொழிநுட்ப வளர்ச்சி கண்டு புதிய புதிய கண்டு பிடிப்புக்களுக்கு வித்திட்டு வரும் வேளையில் இந்த அரிய பெரிய சாதனைகள் சமூகத்திற்கு

பாதிப்புக்களையும் ஏற்படுத்திவருகின்றன என்பதில் ஐயமில்லை
...
பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக கருதிக் கொண்டிருக்கும் நாம் மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க திருமண சட்டத்தரணிகள்; சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளில்; 80 வீதமானவர்கள் விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் அவர்கள் பாவிக்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விபரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து பெற்றுக் கொடுக்கின்றார்களாம்.

எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை தரவேற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் தக்க சாட்சிகளாக காண்பிக்கப்படுகின்றன.

விவகாரத்து கோரி நீதிமன்றம் நோக்கிச் செல்லும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் தரவேற்றியுள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணாம்சம் கொண்டவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.

இவ்வாறு விவாகரத்து வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகளில்; 66 வீதத்தினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் குறிப்பிட்டிருப்பவற்றையே காட்டுகின்றனராம் பேஸ்புக்கை தொடர்ந்து ‘மை ஸ்பேஸ்’ தளம் 15 வீதத்தினரும் விழுக்காடும், ‘ருவிட்டர்’ தளம் 5 வீதமும், இதர தளங்கள் 14 வீதமும்; சட்டத்தரணிகளுக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.

பிரிட்டனிலோ 20 வீதத்தினரின் விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

” இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது – “சற்” செய்வது – தான்” என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!
இதனை தொழில் நிலையங்களில் பணிபுரிபவர்கள் மருத்துவக் காரணங்களை காட்டி விடுமுறையை எடுத்து விட்டு நண்பர்களுடன் உல்லாசமாக் உலா வரும் காட்சிகளை தம் பேஸ்புக்கில் பதிய வைப்பதன் மூலம் தொழிலதிபர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையற்ற உறவுகளை வளர்ப்பதற்கும் இந்த பேஸ்புக் தளம் பயன்படுத்தப்படுகின்றது.