கற்பொழுக்கத்துடன் ஆண்களும் இருக்க வேண்டும்
"பெண்கள் எப்படி கற்பொழுக்கத்துடன் இருக்க வேண்டுமோ அதைப் போன்று ஆண்களும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. பெண்கள் தவறு செய்யும் போது தண்டிக்கச் சொல்லும் இஸ்லாம், ஆண்கள் தவறு செய்தால் அவர்களையும் தண்டிக்கச் சொல்கிறது. கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்து கொண்டு 'பேஸ்புக்' போன்ற இணையதளங்களில் அந்நிய பெண்ணுடன் தவறான முறையில் பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
"இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது" (நூல்: புகாரி 6243) தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

*** FACEBOOK THREAT ***: கற்பொழுக்கத்துடன் ஆண்களும் இருக்க வேண்டும் - கற்பொழுக்கத்துடன் ஆண்களும் இருக்க வேண்டும்
Category:
FACEBOOK கற்றுத்தரும் ஒழுக்கம்
Sunday, January 23, 2011
at 11:18 PM