FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை



கோலாலம்பூர்: கடந்த ஒரு மாதமாக விரக்தியில் இருந்த மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மலேசியாவின் மலாக்கா மாநிலம் அயர்லெலே பகுதியை சேர்ந்த மாணவி சல்லி லீ கியான் சுன் (17). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். தனது தனிப்பட்ட விஷயங்களை பேஸ்புக் இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவள்.

கடந்த ஒரு மாதமாகவே விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இதுதான் தனக்கு கடைசி சீனப் புத்தாண்டு என்று சக தோழிகளிடம் கூறி வந்திருக்கிறாள். தனது அறை சுவரிலும் கிறுக்கி வைத்தாள். தான் மிகவும் சோகத்தில் இருப்பதாகவும் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு வேதனையில் இருப்பதாகவும் பேஸ்புக்கிலும் தெரிவித்திருக்கிறாள்.

இந்நிலையில், பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதியியல் செய்முறை வகுப்பு நடந்தது. அங்கிருந்து திடீரென வெளியேறிய மாணவி சுன் அழுதுகொண்டே 2வது மாடிக்கு ஓடினாள். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். 'முடிவெடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடு' என்று பேஸ்புக் மூலம் சிலர் வலியுறுத்தியதாலேயே இந்த முடிவை மாணவி எடுத்தார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=28988&id1=12

gravatar

நிறைமாதக் கர்ப்பிணியின் நிர்வாண போஸ்! அதிரடியாக அகற்றிய பேஸ்புக் நிர்வாகம்

gravatar

பேஸ்புக்’ இணைய தள பக்கத்தில் ஊடுருவி, ஆபாச படங்களை சேர்த்த இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணின் 'பேஸ்புக்' இணைய தள பக்கத்தில் ஊடுருவி, ஆபாச படங்களை சேர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
...
ம.பி.யின் குணா நகரை சேர்ந்தவர் வினய் சிங் (25). கம்ப்யூட்டர் இன்ஜினியர்.

அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரது குடும்பத்தினருடன் வினய் சிறிது நாட்களாக பழகி வந்தார். நல்ல பையன் என்று கருதிய அந்த குடும்பத்தினர், வினயுடன் தங்கள் மகளை பழக அனுமதித்தனர்.

வீட்டுக்கும் வர ஓ.கே. தெரிவித்தனர். இளம்பெண்ணின் தாய், சமூக இணைப்பு இணைய தளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் உறுப்பினர். அவரது பேஸ்புக் கணக்குக்குள் வினய் சிங் எப்படியோ ஊடுருவி சில்மிஷ கருத்துகளை பதிவு செய்தார். வினய்தான் அதை செய்தது என்பதை இளம்பெண்ணின் தாய் கண்டுபிடித்து விட்டார்.

உடனடியாக வினயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். மகளையும் பழக வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால், தாய் மீது ஆத்திரம் அடைந்த வினய், மகளை பழி வாங்க திட்டமிட்டார். இளம்பெண்ணின் 'பேஸ்புக்' கணக்கில் திறமையை காட்டி ஊடுருவினார். ஆபாச படங்களை சேர்த்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் வினயை கைது செய்த போலீசார், விசாரணையில் குற்றவாளி அவர்தான் என உறுதி செய்தனர்.


http://www.nisais.thambiluvil.info/2010/08/16-2010-0538.html

gravatar

மகளை பேஸ்புக் பயன்படுத்த அனுமதிப்பதில்லை - மிச்சேல் ஒபாமா

 
தனது கணவர் புகைப்பிடிப்பதை முற்றாக நிறுத்தியுள்ளதாக அதிபர் பாரக் ஒபாமாவின்

துணைவியார் மிச்சேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
...
தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் தெரிவித்தார். முன்னதாக ஒபாமாவின் வைத்திய ஆலோசகரும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை தனது மகள் சாசா ஒபாமா பேஸ்புக் உபயோகிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். சிறுவர்கள் பேஸ்புக் பாவிப்பதை தான் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

http://ww5.4tamilmedia.com/index.php/newses/world/2801-michelle-obama-doesnt-allow-daughters-facebook

gravatar

நெட் பைத்தியமா ? சிகிச்சை தேவை .......


க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.
நாமும் நெட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.....ஆனால் வலைதளத்தை உபயோகிக்கும் நாம் அதற்க்கு அடிமையா இல்லையா என எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை......
அதேநேரத்தில் வலைதளத்தை தவிர ஆர்குட், ப...
ேஸ்புக் போன்ற சமுக இணையதளங்கள் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட அதற்கு அடிமை போலவே தெரிகிறார்கள்.....

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

tamilnews.net

gravatar

பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்



ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவபீடாமானது தெற்காசியாவிலேயே பிரசித்தி பெற்றது.அங்கு தான் நான் படித்தேன்..இடையில் விட்டேன் அது வேறு கதை..
அங்கு தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதுவும் எனது batch மாணவி ஒருவருக்கு.

...குறிப்பிட்ட மாணவிக்கு பேஸ்புக் கணக்கு ஒன்று உள்ளது.ஆனால் அவள் பெரிதாக அதனை பாவிப்பதில்லை..வெறுமனே பெயருக்கு வைத்துள்ளாள்.சில கிருமிகள் அவளின் படங்கள் சிலவற்றை எடுத்து பொய்யான கணக்கு ஒன்றை அவள் பெயரில் தொடங்கி அவள் படத்தை போட்டு பல்கலைக் கழகம் மற்றும் அவள் சார்ந்த நண்பர்களை நண்பர்களாக்கிக் கொண்டுள்ளனர்.இதனை ஒருவாறு அறியப்பெற்ற அந்த மாணவி தனது சொந்த பேஸ்புக் கணக்கில் இவ்வாறு பொய்யான கணக்கு ஒன்று உலாவுகிறது என்று சில காலத்துக்கு முன்னர் ஸ்டேடஸ் போட்டிருந்தால்.அதனை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை காரணம் இது போன்று பல விடயங்கள் தற்பொழுது நடைபெறுவதால் இதனையும் அந்த வகையறாவுக்குள் அடக்கி விட்டு இருந்து விட்டோம்.
ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக பிரச்சனை பூதாகரமாக ஆகிக்கொண்டிருக்கிறது..

இப்போது எமது ஆண்டு பெண் பிள்ளைகளை கேவலமாக சித்தரித்து படங்கள் மற்றும் காணொளிகளை அந்த பேஸ்புக் கணக்கில் வெள்ளியிட்டு வருகின்றனர்.வேறு யாருடையதோ காணொளிகளை போட்டு நானும் அவரும் இப்படி,எனது நண்பியும் ஒரு ஆண் பையனின் பெயர் போட்டு அவரும் இப்படி என்று சகிக்க முடியாத வேலைகள் நடைபெறுகின்றன.
ஒரு பெண்ணின் படத்தையும் பெயரையும் கொண்ட கணக்கில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற அதையும் நம்பி சிலர் அதற்க்கு கருத்துரைகளையும் இட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சம்பத்தப்பட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையன் ஒருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது சமீபத்தில்.பல்கலைக்கழகம் என்றால் வதந்திகள் தொடக்கம் அனைத்தும் நடைபெறும் அது சகஜம்..ஆனால் பெண்களை பற்றி கதைக்கும் போது அவதானம் தேவை..குறிப்பிட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையனுக்கும் தொடர்பு என்று கதைகட்டி விட்டார்கள்.இதையறிந்த அந்த அப்பாவி மாணவி அந்த ஜூனியர் பையனை கூப்பிட்டு திட்டி இருக்கிறார்.அதனால் அவர்களுக்கும் இந்த விடயத்துக்கும் தொடர்பு இருக்கலாமென்று எனது ஆண்டு மாணவர்கள் ஊகிக்கின்றனர்.


ஆனால் ஆதாரம் இல்லாமல் எதனையும் செய்யமுடியாது என்பதால் பொறுத்துக்கொண்டிருக்கின்றனர்.போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்கு அறிவித்துள்ள போதும் அவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லையாம்.குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை ப்ளாக் பண்ண முயற்ச்சிகள் மேட்கொள்ளப்பட்டும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.


முதலில் குறிப்பிட்ட மாணவி சம்பந்தமாக கேவலமாக வெளியிட்டவர்கள் பின்னர் எனது வகுப்பை சார்ந்த மாணவிகள் ஒவ்வொருவராக கேவலமாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத கவலைகளுடன்...அவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது..வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.
இது சாதாரண விடயமல்ல..இவ்வாறான விடயங்களால் கடந்த காலங்களில் பல தற்கொலைகளும் சம்பவங்களும் நடந்துள்ளதை மறுக்க முடியாது.சக பல்கலைக்கழக தமிழ் மாணவி மீது இவ்வாறான செயல்களை செய்யும் இத்தகைய காடையர்கள் படித்து என்ன பயன்?எதிர்காலத்தில் இவர்கள் என்னவாக உருவாகப்போகிரார்கள்?
குறித்த மாணவியின் வாழ்க்கை இவர்களுக்கு விளையாட்டாக மாறியுள்ளது..ஒரு ஆணாலேயே தாங்கிக்கொள்ள முடியாத விடயம் ஒரு பெண் பிள்ளையால் எவ்வாறு தாங்கிக்க முடியும்?இத்தனைக்கும் அந்தப் பெண் பிள்ளை மிகவும் அடக்கமான அமைதியான பிள்ளை.எனக்கு தெரியும்.

ஒரு படிக்கின்ற மாணவியின் வாழ்வில் இத்தகைய சம்பவம் எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவரது எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்.மிகவும் கீழ்த்தரமான இழிவான செயல்கள் இத்தகைய பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படுகின்றன.


பல காரணங்களால் நான் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிவிட்டேன் ஆரம்பத்திலேயே.அதற்க்கு அந்த பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் கலாச்சாரமும் ஒருவகையில் காரணம் தான்.
மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகக் கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள்,கலாச்சாரங்கள் இங்கு காணப்படுகிறது.
காலம் காலமாக சீனியர் ஜூனியராக கடத்தப்பட்டு காலம் காலமாக இவ்வாறான செயல்ப்பாடுகள் இங்கு காணப்படுகின்றது.
சொல்லித்திருத்த முடியாத விடயம் கலாச்சாரம்.அவரவர் மனதைப் பொறுத்தது.அது இவர்களுக்கு மாறப்போவதில்லை.
யார் சொல்லையும் கேட்கப்போவதில்லை.


யாராவது எவ்வாறாவது இருந்துவிட்டு போகட்டும் நான் என்பாட்டில் இருப்போம் என்று தான் இருந்தேன்.ஆனால் இத்தகைய சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட போது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.இந்தப் பதிவைப் பார்த்து ஒருசிலர் திருந்தினால் அதுவே எனக்கு போதுமானது.


குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை செயல்ப்பாட்டிலிருந்து நிறுத்த யாருக்கும் ஏதாவது முறைகள் தெரிந்திருப்பின் தெரியப்படுத்தவும்..
இவர்களை எல்லாம் சமூகத் தீவிரவாதிகள்.இத்தகைய களைகள் தான் சமூகத்திலிருந்து முதன் முதலில் அப்புறப்படுத்த வேண்டியது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடத்துணிந்த இவர்கள் சமூகத்துக்குத் தேவையில்லை.



http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_08.html

gravatar

எச்சரிக்கை! :- பேஸ்புக் பாவனையாளர் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்

gravatar

லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல்

 

பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்ற...ு வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக சீதனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெற்ற அன்று அவருக்கு 35 லட்சம் சீதனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து அன்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த மாப்பிளையை அதிகாலையே காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரைத் தேடி அவரது இடத்திற்குச் சென்றுள்ளனர். பெற்றோர் மற்றும் சகோதரங்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆகவே எனது பக்கம் ஒருவரையும் கூட்டிக் கொண்டு வரமாட்டன் என்று கூறியே மாப்பிளை குறித்த பெண்னை ஏமாற்றியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.newjaffna.com/fullview.php?id=MTgyMA%3D%3D
See More

gravatar

பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

 
கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

" பேஸ்புக் ப்ளேசெஸ் " என அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாட்டினில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது.... தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் விரைவில் உலகெங்கும் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது அந்நிறுவனம்.

அதே நேரத்தில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தினால் குற்றங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர். ஒரு நபர் எங்கே இருக்கிறார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பன போன்ற விபரங்களை வெளியிடுவது கொள்ளை சம்பவங்கள் பெருக வழி வகுக்கும் என்கின்றனர் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை சேர்ந்தோர்.


Tamilcnn
See More

gravatar

பேஸ்புக்கை கண்காணிக்கும் அதிகாரிகள்:

 

பேஸ்புக்' எனப்படும் சமூக வலையமைப்பு தொடர்பில் இலங்கையில் அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக, இலங்கை தேசிய கணினி அவசர சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன் சிரேஷ்ட தகவல் பரிமாற்று அதிகாரி ரோஹன பல்லியகுரு இதனை தெரிவித்தார். இந்த இணையத்தளத்தின் ஊடாக, தனிநபர் மேற்கொள்கின்ற மோசடிகள் குறித...
்து, அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளின் அடிப்படையில், பேஸ்புக் மோசடிகளை செய்யபர்களை கைது செய்யும் பொருட்டு, குற்றத் தடுப்பு பிரிவின் துணையுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பேஸ்புக் இணையத்தளத்தை கையாளும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

gravatar

பெண் அறிவிப்பாளரின் பேஸ்புக் விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக புகார்

 
தொலைக்காட்சி பெண் அறிவிப்பாளரின் தந்தையொருவர், தனது மகளின் பேஸ்புக் இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில விபரங்கள் மற்றொரு இணையத்தளத்தில் அவமதிப்பு ஏற்படும் வகையில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் பு...காரிட்டுள்ளார்.

இது தொடர்பான பொலிஸ் கணினிப் பிரிவிலிருந்து அறிக்கையொன்றைப் பெற்று சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு உத்தரவு கோரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.
எனினும் மேலதிக விசாரணைகளுக்கு முன்னர் குறித்த தொலைக்காட்சி அறிவிப்பாளரடமிருந்து வாக்கு மூலமொன்றை பதிவு செய்யுமாறு நீதவான் தெரிவித்தார்.

தமிழ்mirrors.com

gravatar

திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!

 

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 16:38

பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
...

கடந்த ஒன்பது மாத காலத்தில் தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.

குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரரகளுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தமபதியினர் கூட ஒருவர் மறறவரை வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

tamilcnn.com
See More

gravatar

ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது


பாரிஸ்: அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்டோரின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் அத்துமீறி நுழைந்து தவறான தகவல்கள் வெளியிட்ட 25 வயது வாலிபர் பிரான்சில் பிடிபட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூ...
க வலையமைப்புகளில் மர்ம ஆசாமிகள் அத்துமீறி நுழைவதாக கடந்த பல மாதங்களாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து அமெரிக்க எஃப்பிஐ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பிரான்சில் உள்ள ஒருவர் ஒபாமாவின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்ட்டுக்குள் நுழைந்து தகவல்களை அழிப்பதும், தேவையற்ற தகவல்களை சேர்ப்பதுமாக அமளி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

'பாஸ்வேர்ட் கெஸ்ஸிங் புரோகிராம்'ஐ பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பிரபலங்களில் வலையமைப்புகளில் அத்துமிறுவது தெரியவந்தது.

இதையடுத்து பிரான்ஸில் உள்ள சைபர் போலீசாரை எஃப்பிஐ உஷார்படுத்தியது. இந்நிலையில் பாரிஸ் அருகே பை-டி-டோம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபரை பிரான்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

Read: In English
http://news.oneindia.in/2010/03/25/man-held-for-hacking-obamas-twitter-account.html

அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் பணத்துக்காகவோ வேறு தீய நோக்கத்துக்காக இந்த 'ஹாக்கிங்' வேலையில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது.

தன்னுடைய 'ஹாக்கிங்' திறமையை வெளிப்படுத்து காஷூவலாக இந்த குற்றத்தை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2010/03/25/man-held-hacking-obama-s-twitter.html
See More