FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்



ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவபீடாமானது தெற்காசியாவிலேயே பிரசித்தி பெற்றது.அங்கு தான் நான் படித்தேன்..இடையில் விட்டேன் அது வேறு கதை..
அங்கு தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதுவும் எனது batch மாணவி ஒருவருக்கு.

...குறிப்பிட்ட மாணவிக்கு பேஸ்புக் கணக்கு ஒன்று உள்ளது.ஆனால் அவள் பெரிதாக அதனை பாவிப்பதில்லை..வெறுமனே பெயருக்கு வைத்துள்ளாள்.சில கிருமிகள் அவளின் படங்கள் சிலவற்றை எடுத்து பொய்யான கணக்கு ஒன்றை அவள் பெயரில் தொடங்கி அவள் படத்தை போட்டு பல்கலைக் கழகம் மற்றும் அவள் சார்ந்த நண்பர்களை நண்பர்களாக்கிக் கொண்டுள்ளனர்.இதனை ஒருவாறு அறியப்பெற்ற அந்த மாணவி தனது சொந்த பேஸ்புக் கணக்கில் இவ்வாறு பொய்யான கணக்கு ஒன்று உலாவுகிறது என்று சில காலத்துக்கு முன்னர் ஸ்டேடஸ் போட்டிருந்தால்.அதனை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை காரணம் இது போன்று பல விடயங்கள் தற்பொழுது நடைபெறுவதால் இதனையும் அந்த வகையறாவுக்குள் அடக்கி விட்டு இருந்து விட்டோம்.
ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக பிரச்சனை பூதாகரமாக ஆகிக்கொண்டிருக்கிறது..

இப்போது எமது ஆண்டு பெண் பிள்ளைகளை கேவலமாக சித்தரித்து படங்கள் மற்றும் காணொளிகளை அந்த பேஸ்புக் கணக்கில் வெள்ளியிட்டு வருகின்றனர்.வேறு யாருடையதோ காணொளிகளை போட்டு நானும் அவரும் இப்படி,எனது நண்பியும் ஒரு ஆண் பையனின் பெயர் போட்டு அவரும் இப்படி என்று சகிக்க முடியாத வேலைகள் நடைபெறுகின்றன.
ஒரு பெண்ணின் படத்தையும் பெயரையும் கொண்ட கணக்கில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற அதையும் நம்பி சிலர் அதற்க்கு கருத்துரைகளையும் இட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சம்பத்தப்பட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையன் ஒருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது சமீபத்தில்.பல்கலைக்கழகம் என்றால் வதந்திகள் தொடக்கம் அனைத்தும் நடைபெறும் அது சகஜம்..ஆனால் பெண்களை பற்றி கதைக்கும் போது அவதானம் தேவை..குறிப்பிட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையனுக்கும் தொடர்பு என்று கதைகட்டி விட்டார்கள்.இதையறிந்த அந்த அப்பாவி மாணவி அந்த ஜூனியர் பையனை கூப்பிட்டு திட்டி இருக்கிறார்.அதனால் அவர்களுக்கும் இந்த விடயத்துக்கும் தொடர்பு இருக்கலாமென்று எனது ஆண்டு மாணவர்கள் ஊகிக்கின்றனர்.


ஆனால் ஆதாரம் இல்லாமல் எதனையும் செய்யமுடியாது என்பதால் பொறுத்துக்கொண்டிருக்கின்றனர்.போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்கு அறிவித்துள்ள போதும் அவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லையாம்.குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை ப்ளாக் பண்ண முயற்ச்சிகள் மேட்கொள்ளப்பட்டும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.


முதலில் குறிப்பிட்ட மாணவி சம்பந்தமாக கேவலமாக வெளியிட்டவர்கள் பின்னர் எனது வகுப்பை சார்ந்த மாணவிகள் ஒவ்வொருவராக கேவலமாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத கவலைகளுடன்...அவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது..வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.
இது சாதாரண விடயமல்ல..இவ்வாறான விடயங்களால் கடந்த காலங்களில் பல தற்கொலைகளும் சம்பவங்களும் நடந்துள்ளதை மறுக்க முடியாது.சக பல்கலைக்கழக தமிழ் மாணவி மீது இவ்வாறான செயல்களை செய்யும் இத்தகைய காடையர்கள் படித்து என்ன பயன்?எதிர்காலத்தில் இவர்கள் என்னவாக உருவாகப்போகிரார்கள்?
குறித்த மாணவியின் வாழ்க்கை இவர்களுக்கு விளையாட்டாக மாறியுள்ளது..ஒரு ஆணாலேயே தாங்கிக்கொள்ள முடியாத விடயம் ஒரு பெண் பிள்ளையால் எவ்வாறு தாங்கிக்க முடியும்?இத்தனைக்கும் அந்தப் பெண் பிள்ளை மிகவும் அடக்கமான அமைதியான பிள்ளை.எனக்கு தெரியும்.

ஒரு படிக்கின்ற மாணவியின் வாழ்வில் இத்தகைய சம்பவம் எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவரது எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்.மிகவும் கீழ்த்தரமான இழிவான செயல்கள் இத்தகைய பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படுகின்றன.


பல காரணங்களால் நான் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிவிட்டேன் ஆரம்பத்திலேயே.அதற்க்கு அந்த பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் கலாச்சாரமும் ஒருவகையில் காரணம் தான்.
மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகக் கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள்,கலாச்சாரங்கள் இங்கு காணப்படுகிறது.
காலம் காலமாக சீனியர் ஜூனியராக கடத்தப்பட்டு காலம் காலமாக இவ்வாறான செயல்ப்பாடுகள் இங்கு காணப்படுகின்றது.
சொல்லித்திருத்த முடியாத விடயம் கலாச்சாரம்.அவரவர் மனதைப் பொறுத்தது.அது இவர்களுக்கு மாறப்போவதில்லை.
யார் சொல்லையும் கேட்கப்போவதில்லை.


யாராவது எவ்வாறாவது இருந்துவிட்டு போகட்டும் நான் என்பாட்டில் இருப்போம் என்று தான் இருந்தேன்.ஆனால் இத்தகைய சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட போது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.இந்தப் பதிவைப் பார்த்து ஒருசிலர் திருந்தினால் அதுவே எனக்கு போதுமானது.


குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை செயல்ப்பாட்டிலிருந்து நிறுத்த யாருக்கும் ஏதாவது முறைகள் தெரிந்திருப்பின் தெரியப்படுத்தவும்..
இவர்களை எல்லாம் சமூகத் தீவிரவாதிகள்.இத்தகைய களைகள் தான் சமூகத்திலிருந்து முதன் முதலில் அப்புறப்படுத்த வேண்டியது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடத்துணிந்த இவர்கள் சமூகத்துக்குத் தேவையில்லை.



http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_08.html