FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

 
கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

" பேஸ்புக் ப்ளேசெஸ் " என அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாட்டினில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது.... தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் விரைவில் உலகெங்கும் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது அந்நிறுவனம்.

அதே நேரத்தில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தினால் குற்றங்கள் பெருக வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலர் விமர்சித்துள்ளனர். ஒரு நபர் எங்கே இருக்கிறார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பன போன்ற விபரங்களை வெளியிடுவது கொள்ளை சம்பவங்கள் பெருக வழி வகுக்கும் என்கின்றனர் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை சேர்ந்தோர்.


Tamilcnn
See More