FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மோசடிகள் அதிகரிப்பு



பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருக்கின்றன என இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

பிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்து வருவதை கணினி மென்பொர...ுள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோ சொப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது.

பிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற பிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

பிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான பிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த பிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

http://www.vannimedia.com/home/?p=6606

gravatar

பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை என்று பிரிட்டனில் அதிகரிக்கும் பேஸ்புக் குற்றங்கள்!

 



பிரிட்டனில் பேஸ்புக்கைப் பாவித்து இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன.

பாலியல், மிரட்டல், கொள்ளை, கொலை என எல்லா வகையான குற்றச் செயல்களும் பேஸ்புக் வழியாக இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
...
பேஸ்புக் பல குடும்பப் பிரச்சினைகளுக்கும், வாழ்க்கைப் பங்காளிகளுக்கிடையில் கருத்து மோதல்களுக்கும் கூட காரணமாகியுள்ளது. அதே போல் அது பல பிரச்சினைகளைத் தீர்த்தும் வைத்துள்ளது.

இந்த சமூக இணையத்தளத்தைப் பயன்படுத்தி சில குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் பேஸ்புக் வழியாகக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்தாண்டில் பேஸ்புக் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களில் 6200 குற்றச் செயல்கள் பேஸ்புக் வழியாக இடம்பெற்றவை.

ஒரு மணிநேரத்துக்கு ஒன்று என்ற ரீதியில் பேஸ்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 14 வயதான ஒரு பெண் பேஸ்புக் வழியாக தொடர்பான ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோல் இன்னும் பல சம்பவங்களும் பேஸ்புக் வழியாக இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் பல பாகங்களிலும் பேஸ்புக் வழியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.

சமூக இணையத்தளங்கள் அளவுக்கு அதிகமான வெளிப்படைத் தன்மை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21582%3A2011-05-05-06-59-05&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401
See More

gravatar

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

 

பேஸ்புக்கால் பரீட்சைகளைக் கோட்டை விடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை

பேஸ்புக் போன்ற இணையத் தளங்களில் பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் அவர்கள் தங்களது பரீட்சைகளைக் கோட்டை விட்டு விடுவதாக பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பெற்றோர்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தக் கவலையுடன் காணப்படுகின்றனர்.12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்...பட்டவர்கள் படிப்பு நோக்கத்திற்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவதை விட சமூக வலையமைப்புக்களிலேயே அதிக நேரத்தைக் கழிக்கின்றனர்.

மாணவர்களுள் அரைவாசிப்பேர் டுவிட்டர்,மை ஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்புக்களை தினசரிப் பாவிப்பவர்களாகவே உள்ளனர். 40 வீதமானவர்கள் இணையத்தளம் ஊடாக இசையை ரசிக்கின்றனர்.

16 வீதமானவர்கள் மட்டுமே தமது பாடசாலை வீட்டு வேலைகளுக்காக இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வொன்றின் முடிவிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக 4427 பெற்றோர்கள் மத்தியிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டில் தமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதே தெரியவில்லை என்று இந்தப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பிள்ளைகளுக்கு இது சம்பந்தமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தமது பொறுப்பு என்பதையும் அவர்களுள் 76 வீதமானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்டர்நெட்டில் பிள்ளைகள் என்ன பார்க்கின்றார்கள் என்பதைப் பெற்றோர் தெரிந்து கொள்ளக்கூடிய அல்லது அதைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு முறையை டோக்டோக் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21742%3A2011-05-09-09-41-37&catid=43%3A2010-01-01-15-58-29&Itemid=401