FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



Archives

gravatar

பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவனால் வந்த விபரீதம்

கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகேஷ் குமார் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் ஸாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...
எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன். அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளை பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையை சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

இந்தக் கடிதத்தை 11ம் தேதி அவர் எழுதியுள்ளார். ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு அவர்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்

http://thatstamil.oneindia.in/news/2011/10/13/i-killed-my-wife-shameela-having-relationships-many-aid0091.html