FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக்’ இணைய தள பக்கத்தில் ஊடுருவி, ஆபாச படங்களை சேர்த்த இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணின் 'பேஸ்புக்' இணைய தள பக்கத்தில் ஊடுருவி, ஆபாச படங்களை சேர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
...
ம.பி.யின் குணா நகரை சேர்ந்தவர் வினய் சிங் (25). கம்ப்யூட்டர் இன்ஜினியர்.

அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரது குடும்பத்தினருடன் வினய் சிறிது நாட்களாக பழகி வந்தார். நல்ல பையன் என்று கருதிய அந்த குடும்பத்தினர், வினயுடன் தங்கள் மகளை பழக அனுமதித்தனர்.

வீட்டுக்கும் வர ஓ.கே. தெரிவித்தனர். இளம்பெண்ணின் தாய், சமூக இணைப்பு இணைய தளங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் உறுப்பினர். அவரது பேஸ்புக் கணக்குக்குள் வினய் சிங் எப்படியோ ஊடுருவி சில்மிஷ கருத்துகளை பதிவு செய்தார். வினய்தான் அதை செய்தது என்பதை இளம்பெண்ணின் தாய் கண்டுபிடித்து விட்டார்.

உடனடியாக வினயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். மகளையும் பழக வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால், தாய் மீது ஆத்திரம் அடைந்த வினய், மகளை பழி வாங்க திட்டமிட்டார். இளம்பெண்ணின் 'பேஸ்புக்' கணக்கில் திறமையை காட்டி ஊடுருவினார். ஆபாச படங்களை சேர்த்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் வினயை கைது செய்த போலீசார், விசாரணையில் குற்றவாளி அவர்தான் என உறுதி செய்தனர்.


http://www.nisais.thambiluvil.info/2010/08/16-2010-0538.html