FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக்கை கண்காணிக்கும் அதிகாரிகள்:

 

பேஸ்புக்' எனப்படும் சமூக வலையமைப்பு தொடர்பில் இலங்கையில் அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக, இலங்கை தேசிய கணினி அவசர சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன் சிரேஷ்ட தகவல் பரிமாற்று அதிகாரி ரோஹன பல்லியகுரு இதனை தெரிவித்தார். இந்த இணையத்தளத்தின் ஊடாக, தனிநபர் மேற்கொள்கின்ற மோசடிகள் குறித...
்து, அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளின் அடிப்படையில், பேஸ்புக் மோசடிகளை செய்யபர்களை கைது செய்யும் பொருட்டு, குற்றத் தடுப்பு பிரிவின் துணையுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பேஸ்புக் இணையத்தளத்தை கையாளும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.