FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி புகார்

 

ஆன்லைன் குழு மூலம் மகாத்மா காந்தியின் மதிப்பை இழிவுபடுத்துவதாக சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மீது ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.


...உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.


தவறான வகையில் காந்தியின் உருவப்படத்தை வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பிவருகிறது என ஃபேஸ்புக் குழுவுக்கு எதிராக அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.

காந்தி குறித்து ஆபாசமான வார்த்தைகள் அந்த ஆன்லைன் குழுவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் இதுபோன்று வெளியிடப்பட்டுள்ளதாக தாகூர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்

http://www.tharavu.com/2011/01/blog-post_7868.html