FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
திறந்தவுடன் ஆன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள்


மேலே குறிப்பிட்டு உள்ளதை போல விருப்பத்தேர்வுகள் என்பதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோவில் உள்ள ஆப் லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும்


இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்க படுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது.
இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் திரம்பவும் இவ்வசதியை பெற்று விடலாம்