FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக்கில் வேண்டாத நபரை தடை செய்ய

தினம் தினம் பேஸ்புக்கின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகிறது. பேஸ்புக் வாசகர்கள் அவர்களின் நண்பர்களிடம் தான் விஷயங்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.  தெரியாத முகங்களை கூட சுலபமாக நண்பர்களாக்கி கொள்ளலாம்.  இந்த பேஸ்புக்கில் எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று பார்ப்போம்.
  • இது போல் தடை செய்து விட்டால் அவரால் நம்மை தொடர்பு கொள்ளவே முடியாது.
  • நாம் பகிரும் எந்த செய்தியும் அவருக்கு அப்டேட் ஆகாது. 
  • அவரின் பகிர்தலும் நமக்கு வராது.
எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று இங்கு பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு கணக்கு(Settings) பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள்(Privacy Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.  
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள தடை செய்ய பட்டுள்ளவர்கள் என்பதில் உள்ள Edit your Lists என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு இன்னொரு விண்டோ வரும். அதில் பெயர், மின்னஞ்சல் என்ற இரு கட்டங்கள் இருக்கும் அதில் நீங்கள் தடை செய்ய விரும்போவோரின் பெயரை கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் அந்த பெயரில் உள்ள வர்களின் பட்டியலை உங்களுக்கு காட்டும்.
  • இதில் உங்களுக்கு வேண்டாதவரை தேர்வு செய்து அதற்கு நேராக உள்ள Block என்பதை க்ளிக் செய்தால் அவர் தடை செய்யபட்டியலில் வந்து விடுவார்.
  • அல்லது மின்னஞ்சலோ கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் போதும் அவர்கள் நேரடியாக தடை செய்யப்பட்டு விடுவார்கள்.  
  • இனி உங்களின் எந்த விவரங்களையும் அவரால் பார்க்க முடியாது. 
  • ஒருவேளை பிறகு நீங்கள் அவரை இந்த பட்டியலில் இருந்து நீக்க விரும்பினால் அவரின் பெயருக்கு நேராக உள்ள Unblock லிங்கை அழுத்தினால் அவர் இந்த பட்டியலில் இருந்து நீக்க படுவார்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/how-to-block-some-one-on-facebook.html