FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

போதை மருந்து கடத்த பேஸ்புக் வாயிலாக ஆள் தேர்வு



மலேஷியாவில் இளம் பெண்களை போதை மருந்து கடத்தல் தொழிலுக்கு பேஸ் புக் வாயிலாக வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக பரபரப்பு புகாரினை அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மலேஷிய வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட்ரையாட் கூறுகையில், மலேஷியாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் அதி...கரித்து வருகிறது. இவர்கள் சிண்டிகேட் அமைத்து போதை மருந்தினை கடத்தி வருகின்றனர்.
 
இவர்களில் ஆப்ரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். இவர்கள் சீனா, ஜப்பான், லத்தீன் அமெரி்க்கா நாடுகளுக்கு போதை மருந்து கடத்துகி்ன்றனர். மேலும் இவர்கள் மீது மலேஷிய போலீசார் கண்காணித்து வந்தாலும் அதனை முறியடிக்க தற்போது மலேஷிய நாட்டு இளம் பெண்களை பேஸ் புக் எனும் சமூக வலைதளம் வாயிலாக வேலைக்கு ஆள் எடுப்பது போன்று நியமித்து கடத்தல்தொழிலில் ஈடுபடுத்துகி்ன்றனர். இவர்கள் டூரிஸ்ட் வழிகாட்டி என தங்களை அறிமுகப்படுத்தி இத்தகைய தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றார்.See More