FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

சர்கோசியின் பேஸ்புக் கணக்கு களவு போனது

 

செவ்வாய்க்கிழமை, 25 சனவரி 2011, 04:37.41 பி.ப GMT ]

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பேஸ்புக் கணக்கு இணைய சமூக விரோதிகள் சிலரால் திருடப்பட்டுள்ளது. திருடிய நபர் கடவுச்சொல் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றியுள்ளதுடன் நகைச்சுவை பாணியிலான சில வாசகங்களையும் சர்கோசியின் பேஸ்புக் பக்கங்களில் போட்ட...ு வருகிறார்.
2012 இல் மறு தேர்தல் நடத்துவதற்கான முனைப்பில் தீவிரமாக அதிபர் செயலாற்றி வருவதைப் போன்ற பொய்யான தகவல்களை சர்கோசி பெயரிலேயே இணையத் திருடர்கள் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் களவாடி விட்டதாகவும் அதில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கும் தனக்கு சம்பந்தமில்லை என்பதை நிக்கோலஸ் சர்கோசி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த விசாரணையிலும் தொடர்ந்தும் சர்கோசியின் பேஸ்புக் பக்கங்களில் திருடர்கள் தகவல்கள் அளிப்பதை தடுக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Lankasri world http://www.newsonews.com/view.php?22AOld0bcE80Qd4e3AMM202cBnB2ddeZBnp203eCAA2e4W08qacb2lOe42