FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

தாய் பேஸ்புக்கில் இருக்க பிள்ளை பரலோகம் போனது

January 17, 2011

அமெரிக்காவில் பேஸ்புக் இணையதளத்தின் ‘கபே வேர்ல்டு’ என்ற விளையாட்டில் அம்மா மூழ்கி விட, 13 மாத ஆண் குழந்தை பாத்டப்பில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. அமெரிக்காவில் கொலராடா மாகாணத்தை சேர்ந்தவர் ஷன்னான் ஜான்சன் (34). இவருக்கு 13 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவரது பொழுதுபோக்கு பேஸ்புக் இணையதளத்தில் ‘கபே வேர்ல்டு’ விளையாடுவது, தோழிகளுடன் அரட்டை அடிப்பது.

இவர் ஒரு அறையிலும், 13 மாத மகன் மற்றொரு அறையிலும் விளையாடுவார்கள். சம்பவத்தன்று மற்றொரு அறையில் உள்ள பாத்டப் தண்ணீரில் மகனை விளையாட விட்டு, பேஸ்புக்கில் விளையாட்டு, தோழிகளுடன் அரட்டை என்று ஷன்னான் மூழ்கினார்.

மகனை மறந்தார். பாத்டப் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த குழந்தையின் சத்தம் இல்லை. இதை கவனிக்காத ஷன்னான் 10 நிமிடம் கழித்து வந்து பார்த்தார். அப்போது ஷன்னானுக்கு அதிர்ச்சி. குழந்தை தலைகுப்புற தண்ணீரில் கவிழ்ந்து மூச்சு விட முடியாமல் திணறி இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ஷன்னான் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். குழந்தையை மீட்டு சென்ற மருத்துவர்கள், தண்ணீரில் மூழ்கியதில் குழந்தை ஏற்கெனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் விசாரணையில் ஷன்னான் கூறுகையில், ‘குழந்தை தனியாக இருக்க விரும்புவதால் அடிக்கடி பாத்டப் தண்ணீரில் விட்டு விடுவேன். ‘அம்மா குழந்தையாக’, அவன் வளர்வதை நான் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். இக்குற்றச்சாட்டின் கீழ் ஷன்னான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


http://www.24dunia.com/tamil-news/shownews/0/தாய்-பேஸ்புக்கில்-இருக்க-பிள்ளை-பரலோகம்-போனது/616225.html