தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக்கில் அறிவித்த பெண்
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக்கில் அறிவித்த பெண் - கிண்டலடித்த பேஸ்புக் நண்பர்கள்
சமூக வலைகளை எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற அறிவு பலரிடம் மங்கி வருவதையே இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது எடுத்துக் காட்டி வருகின்றன தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சைமன் பேக் என்ற பெண் தன்னுடைய பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்குச் சென்று அனைத்து தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு விட்டதாகவும் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

இவருக்கு பேஸ்புக் சமூகவலையில் 1048 நண்பர்கள் உள்ளனர். இந்த தகவலை படித்த பின்னரும் சைமனின் நண்பர்கள் யாரும் அவரை தொடர்பு கொள்ளவோ அவருக்கு உதவவோ முயற்சிக்கவில்லை. மாறாக சைமனின் இந்த தகவலுக்கு கிண்டலும் , கேலியுமான பதிலையே பல நண்பர்கள் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
சிலர் சைமனை பொய் பித்தலாட்டக்காரி எனவும் மேலும் ஒரு நண்பர் சாவது அவர் விருப்பம் எனவுமே பதிலளித்துள்ளனர். 17 மணி நேரங்கள் கழித்து ப்ரிஹ்டனில் உள்ள சைமனின் வீட்டைத் திறந்த போலீஸ் அவர் உண்மையில் இறந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்செயலாக ஊனமுற்ற நிலையில் உள்ள சைமனின் தாய் மகளின் தற்கொலைக் குறிப்புக்களை பார்த்து விட்டு 999 என்ற அவசர எண்ணை அழைத்துள்ளார். அதன் பிறகே விடயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
http://networkedblogs.com/cGKxS

*** FACEBOOK THREAT ***: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக்கில் அறிவித்த பெண் - தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேஸ்புக்கில் அறிவித்த பெண்
Category:
FACEBOOK கொலைகள்
Friday, January 21, 2011
at 12:56 PM