FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக் கில் பதிவேற்றம் செய்த காதலனுக்கு இலங்கையில் சிறைத் தண்டனை



தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு ...
சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்ற விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும், கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையும் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.athirady.info/?p=130927&sess=e3d9bef85e667f0fdb6da7af946f00c1
See More