FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்"

பெரும்பாலும் பலருடைய திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட முக்கிய காரணமாக பேஸ்புக் இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
...கடந்த ஒன்பது மாத காலமாக தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே முக்கியமாக பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.

குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தம்பதியினர் கூட வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

lankasri world news http://www.newsonews.com/view.php?224Q08qc202pnBZd4e2eUOldacb0eCAAeddeAAMMe0bcadlOA3e4dZBnB3202cq80Q42