FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

விவகாரங்களுக்கு வலைவிரிக்கும் பேஸ்புக், ருவிட்டர் வலைத்தளங்கள்



உலகம் வேகமாக தொழிநுட்ப வளர்ச்சி கண்டு புதிய புதிய கண்டு பிடிப்புக்களுக்கு வித்திட்டு வரும் வேளையில் இந்த அரிய பெரிய சாதனைகள் சமூகத்திற்கு

பாதிப்புக்களையும் ஏற்படுத்திவருகின்றன என்பதில் ஐயமில்லை
...
பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக கருதிக் கொண்டிருக்கும் நாம் மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க திருமண சட்டத்தரணிகள்; சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளில்; 80 வீதமானவர்கள் விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் அவர்கள் பாவிக்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விபரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து பெற்றுக் கொடுக்கின்றார்களாம்.

எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை தரவேற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் தக்க சாட்சிகளாக காண்பிக்கப்படுகின்றன.

விவகாரத்து கோரி நீதிமன்றம் நோக்கிச் செல்லும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் தரவேற்றியுள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணாம்சம் கொண்டவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.

இவ்வாறு விவாகரத்து வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகளில்; 66 வீதத்தினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் குறிப்பிட்டிருப்பவற்றையே காட்டுகின்றனராம் பேஸ்புக்கை தொடர்ந்து ‘மை ஸ்பேஸ்’ தளம் 15 வீதத்தினரும் விழுக்காடும், ‘ருவிட்டர்’ தளம் 5 வீதமும், இதர தளங்கள் 14 வீதமும்; சட்டத்தரணிகளுக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.

பிரிட்டனிலோ 20 வீதத்தினரின் விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

” இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது – “சற்” செய்வது – தான்” என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!
இதனை தொழில் நிலையங்களில் பணிபுரிபவர்கள் மருத்துவக் காரணங்களை காட்டி விடுமுறையை எடுத்து விட்டு நண்பர்களுடன் உல்லாசமாக் உலா வரும் காட்சிகளை தம் பேஸ்புக்கில் பதிய வைப்பதன் மூலம் தொழிலதிபர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையற்ற உறவுகளை வளர்ப்பதற்கும் இந்த பேஸ்புக் தளம் பயன்படுத்தப்படுகின்றது.