FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை


பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள். மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார்.


எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.