பேஸ்புக் இணையத்தளத்திற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள்
பேஸ்புக் இணையத்தளத்திற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள்
சமூகக் கட்டமைப்புத் தளமான பேஸ்புக்கிற்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் கடந்த வாரம் பேஸ்புக்கை பயன்படுத்துபவர் ஒரு வரின் பதிவை அதிகாரிகள் கண்டு பிடித்து தடை செய்திருப்பதாக பெண்கள், சிறுவர்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பேஸ்புக் ...தளங்கள் சிலரால் துஷ் பிரயோகப்படுத்தப்படுவதாக கடந்த வாரம் பெண்கள், சிறுவர் பிரிவுக்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தது.

இலங் கையைச் சேர்ந்த சிறுமிகள் பெண்களின் படங்களை அவர்களின் சம்மதமின்றி சிலர் மாற்றியுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது.ஏனைய இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் பதிவுகளிலிருந்து படங்கள் அவ்வப்போது எடுக்கப்பட் டுள்ளன. அகௌரவமான முறையில் அவை மாற்றம் செய்யப்பட் டுள்ள பின்னர் பேஸ்புக்கின் வேறு பதிவுகளில் பிரசுரிக்கப்படுகின்றன.
இந்த வருட நடுப்பகுதிவரை சுமார் 50 முறைப்பாடுகள் இது தொடர்பாக பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. பேஸ்புக்கில் துஷ்பிரயோக நடவடிக்கையிலீடுபடும் சக்தி களை கண்டுபிடிப்பது கடினமான விடயமாக இருப்பதாக பெண் கள், சிறுவர்கள் பிரிவு கூறியுள்ளது.கணினி இணைய பாதுகாப்பு முகவரியைக் கண்டுபிடிக்க முடி யாதுள்ளதாகவும் சர்வதேச இணையத்தளத்திற்கு பிரதிமைகளை மாற்றும் போது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமலிருப்பதாகவும் பெண்கள், சிறுவர் பிரிவு தெரிவித்துள் ளது.
ஆயினும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் உதவியு டன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாற்றுத் தொழில்நுட்பத்தை கண்டறிவதற் கான பேச்சுவார்த்தை இடம்பெறு வதாக பெண்கள், சிறுவர் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
http://www.meelparvai.net/inde x.php?view=article&catid=133%3A2009-02-11-09-28-49&id=2404%3A2010-09-25-01-14-41&option=com_content&Itemid=322 See More
http://www.meelparvai.net/inde