FACEBOOK STATUS

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். இருந்தாலும் குறிப்பாக இந்த FACEBOOK பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது. ஆதலால் நன்மை -தீமைகளை புரிந்து FACEBOOKகை பயன்படுத்த தெரியவேண்டும் இல்லையென்றால் FACEBOOKகை விட்டு வெளியேறுவதே சிறந்தது.



gravatar

பழைய காதல் உறவுகளைத் தொடரச் செய்யும் பேஸ்புக்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 


காதல் உறவுகள் முறிந்தாலும் கூட, பேஸ்புக் அதைத் தொடர்ந்து நீடிக்கவைக்கின்றது.

முன்னாள் காதலர்களை இன்டர்நெட் வழியாகப் பின்தொடர பேஸ்புக் தொடர்ந்தும் அழைப்பு விடுத்த வண்ணமே உள்ளது என்று இணையப் பின்தொடரல்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
...
பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர் டொக்டர் எம்மா ஷோர்ட் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.

இணையத்தளம் மூலமான ஒரு சூதாட்ட வசீகரமாகவே பழைய காதலர்களைப் பின் தொடரும் இந்த பேஸ்புக் அழைப்பு இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

சைபர் பின் தொடரல்கள் பற்றிய பிரிட்டனின் முதலாவது ஆய்வாகவும் இது அமைந்துள்ளது. இதன் முடிவுகளின் படி இணையத் தளக் காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் ஆண்கள்.

இந்த விடயத்தில் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்.

டொக்டர் எம்மா இணையத்தளம் வாயிலாகத் தான் இந்த ஆய்வை நடத்தியும் உள்ளார். பலர் பெருமளவு ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டதாக இவர் தெரிவித்துள்ளார்.


http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=19460&Itemid=401
See More